தேவையான பொருட்கள் 


முந்திரி, பாதாம், பிஸ்தா, வெள்ளரி விதைகள் என்று உங்களுக்கு விருப்பமான மற்றும் உங்களிடம் இருக்கும் நட்ஸ் வகைகளை அதிகம் சேர்த்தால் சுவையாக இருக்கும். ஏலக்காய் தூள் இல்லையென்றால் ஏலக்காயை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி பொடித்து வைத்துக் கொள்ளலாம். 


செய்முறை


அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு நெய் விட்டு காய விட வேண்டும். நெய் காய்ந்ததும், அதில் பொடித்து வைத்துள்ள நட்ஸ் வகைகளை சேர்த்து  பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் உலர் திராட்சையையும் சேர்த்து  வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த நெய்யில்  அரிசியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.


நீங்கள்,  பச்சரிசி,  புழுங்கல் அரிசி,  பாசுமதி அரிசி என்று எந்த அரிசியை வேண்டுமானாலும் பாயசம் செய்ய தேர்ந்தெடுக்கலாம்.  அரிசி பொன்னிறமாக வறுபட்டதும் அதனை ஆற விடவேண்டும். அரிசி ஆறியதும் அதை மிக்சியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.


இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு  கடாயை வைக்க வேண்டும். அதில் கால் கப் அளவிற்கு மட்டும் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறிவிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். தண்ணீர் எதுவும் சேர்க்கக்கூடாது. சர்க்கரை கரைந்து பொன்னிறமாக ஆகும் வரை கிளறிவிட வேண்டும். பொன் நிறத்திற்கு வந்ததும் அதனுடன் அரை லிட்டர் அளவிற்கு கொழுப்பு பாலை தண்ணீர் சேர்க்காமல் அப்படியே சேர்க்க வேண்டும்.  ஒரு ஐந்து நிமிடம் கொதி வரும் வரை  ஏடு படிய விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.


பால் கொதித்ததும்,  அதில் பொடித்து வைத்துள்ள அரிசியை சேர்க்க வேண்டும். இப்போது அரிசி வெந்து பாயாசம் சற்று கெட்டியான பதத்திற்கு வரும். இப்போது, மீதமிருக்கும் அரை கப் சர்க்கரையை சேர்த்து கலந்து விட வேண்டும். இப்போது பாயசத்தில் ஏலக்காய் பொடியை  சேர்க்க வேண்டும். பாயசம் நன்கு கொதித்து வரும் போது,  நெய்யில் வறுத்த நட்ஸ் வகைகளை சேர்க்க வேண்டும்.


மீண்டும் ஒரு ஐந்து நிமிடம் நன்கு கொதித்து பாயசம் கெட்டியானதும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.  அதிக அளவிற்கு கொதிக்க விட்டு பாயசத்தை ஆற விட்டால் அது அதிக கெட்டி ஆகி விடும். எனவே அதற்கேற்றவாறு பாயசத்தை கொதிக்க விட வேண்டும். அவ்வளவு தாங்க... டேஸ்டியான அரிசி பாயசம் தயார் ஆகிடுச்சு..


மேலும் படிக்க


மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் கிராமத்தில் பணப்புழக்கம் உயர்ந்திருக்கிறது - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்


Lander Rover: சிக்னல் அனுப்பாத சந்திரயான் 3.. சோகத்தில் விஞ்ஞானிகள்.. இஸ்ரோ புதிய தகவல்