ஒரு கப் அளவு காய்ந்த பச்சை பட்டாணியை முன் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து வைத்து விட வேண்டும். பட்டாணியை அளந்த கப்பால் இரண்டு கப் பாசுமதி அரிசியை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
தேங்காயை அரைத்து ஒரு கப் அளவிற்கு தேங்காய் பால் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு பட்டை துண்டு, 4 லவங்கள், சிறிய துண்டு ஜாதி பத்திரி, இரண்டு ஸ்பூன் சோம்பு, 4 பச்சை மிளகாய், ஒரு துண்டு நறுக்கிய இஞ்சி, 10 பல் பூண்டு, 10 சிறிய வெங்காயம், ஒரு கைப்பிடி புதினா இலைகள், சிறிது கொத்தமல்லி இலை சேர்த்து இதில் மிக குறைவாக தண்ணீரி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். (காரத்திற்கு பச்சை மிளகாய் மட்டுமே சேர்ப்பதால், பச்சை மிளகாயை உங்கள் காரத்திற்கு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளலாம்)
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் டேபிள் ஸ்பூன் எண்ணெய், ஒரு டேபிஸ் ஸ்பூன் நெய் சேர்க்கவும். சூடானதும், இரண்டு பிரிஞ்சி இலை, ஒரு அன்னாசி பூ, இரண்டு ஏலக்காய், நீளவாக்கில் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். கண்ணாடிப்பதம் வந்ததும் அரைத்த மசாலா விழுதை இதனுடன் சேர்க்கவும். தீயை மிதமாக வைத்து மசாலாவின் பச்சை வாசம் போகும் வரை வதக்கி விட வேண்டும். பின் ஊற வைத்துள்ள பச்சை பட்டாணியை தண்ணீரை வடிகட்டி விட்டு மசாலாவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இப்போது ஊறவைத்த பாசுமதி அரிசியை இதனுடன் சேர்க்க வேண்டும். இதில் ஒரு கப் தேங்காய் பால், இரண்டரை கப் அளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விட்டு உப்பை சரி பார்க்க வேண்டும். இப்போது குக்கரை மூடி இரண்டு விசில் வரும் வரை வேகவைக்க வேண்டும்.
பின் பிரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து பார்த்தால் சுவையான பட்டாணி சாதம் தயாராக இருக்கும். இதல் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து உடையாமல் கிளறிவிட வேண்டும். இந்த சாதத்தை சூடாக பறிமாறலாம். சுவை மிகவும் நன்றாக இருக்கும்.