ஒரு நல்ல காலை உணவு அந்த நாளுக்கு ஒரு சிறந்த தொடக்கமாகும், ஆனால் சிலர் காலை உணவுக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை. காலையில் ஒரு வயிறு நிரம்ப உண்பது நம்மை மணிக்கணக்கில் முழுதாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், போதுமான நார்ச்சத்து, புரதங்கள், கொழுப்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. சரியான காலைத் உணவைத் தேர்ந்தெடுப்பது குழப்பமானதாக இருந்தாலும், ஆரோக்கியமான காலை உணவுக்கான சில பரிந்துரைகள் இங்கே உள்ளன.


1. முட்டை
முட்டை சுவையானது, ஆரோக்கியமானது மற்றும் சமைக்க எளிதானது. ஆனால் அதைவிட, அதைக் கொண்டு செய்யக்கூடிய ரெசிபிகள் யாரையும் சலிப்படையச் செய்வதில்லை. காலையில் அவித்த முட்டையை சாப்பிடலாம் அல்லது ஆம்லெட் செய்து தோசையுடன் பரிமாறலாம்.


2. ஓட்ஸ்
ஒரு உன்னதமான காலை உணவு தேர்வு, இது எப்போதும் ட்ரெண்டிலிருந்து விலகியதே இல்லை, ஏனெனில் இது எளிதாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். ஓட்ஸில் இரும்புச்சத்து, பி வைட்டமின்கள், மேங்கனீஸ், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் செலினியம் ஆகியவற்றின் சத்துகள் உள்ளடங்கியுள்ளன.


3. காய்கறி சாலட்
பல்வேறு காரணங்களுக்காக காலை உணவுக்கான சாலடுகள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. பச்சை இலைகள் மற்றும் பிற காய்கறிகளின் கலவையானது அனைத்து அத்தியாவசிய வைட்டமின்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதங்களை வழங்குகிறது, இதனால் நம் உடலுக்கு நார்ச்சத்து கிடைக்கிறது.




4. முழு கோதுமை டோஸ்ட்
நார்ச்சத்து மற்றும் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் இருப்பதால், இது மெதுவாக ஜீரணிக்கக்கூடியது மற்றும் நமது இரத்த சர்க்கரை அளவை திடீரென அதிகரிக்கச் செய்யாதபடியால் இது காலை உணவுக்கான ஒரு நல்ல தேர்வாக இருக்கிறது. இதற்கு இன்னும் கூடுதல் சுவையூட்ட முட்டை மற்றும் பழங்கள் கொண்டு சாண்ட்விச்சாகப் பரிமாறலாம்.


5. பழங்கள்
நீங்கள் காலை உணவு சாப்பிடும் பழக்கம் இல்லாதவர் என்றால் அதனைப் பழங்களைச் சாப்பிடுவதுடன் தொடங்கலாம். பழ சாலட் அல்லது ஸ்மூத்தி போன்ற உங்களுக்கு விருப்பமான பழங்களைக் கொண்டு நீங்கள் செய்யக்கூடிய பல ரெசிப்பிகள் ஆன்லைனில் உள்ளன. சமச்சீரான காலை உணவுக்கு, நீங்கள் அதை மற்ற உயர் புரதம் அல்லது நார்ச்சத்து உணவுகளுடன் இணைத்துச் சாப்பிடலாம்.


6. சியா சீட்ஸ் புட்டிங்
ருசியான மற்றும் சுலபமாகச் செய்யத் தேடினால், இதுவே எல்லோருடைய தேர்வாகவும் இருக்கும். சியா விதைகளை க்ரீக் யோகர்ட், பாலாடைக்கட்டி அல்லது புரோட்டீன் ஷேக் போன்ற உயர் புரத உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிட்டால் இன்னும் நன்மை பயக்கும்.


7. போஹா
மிகவும் தேவையான காலை ஊட்டச்சத்தை வழங்கும் எளிதான காலை உணவு அவல் உப்புமா என்னும் போஹா. உங்களுக்கு பிடித்த சில காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்களுடன் சமைத்த அவல் ஒரு சிறந்த காலை உணவைத் தருகிறது.