News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

கரூர்: ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் விற்பனை - உற்பத்தியாளர்கள் கலெக்டரிடம் மனு

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரூர் மாவட்ட தென்னை- வேளாண் பயிர் சாகுபடி சங்கம் மற்றும்  தமிழ் மாநில தென்னை உற்பத்தியாளர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

FOLLOW US: 
Share:

பாமாயிலுக்கு பதிலாக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க வேண்டும் என மக்கள் குறைத்தீர் கூட்டத்தில் மனுக்கள் அளிக்கப்பட்டது. கரூர் மாவட்ட தென்னை- வேளாண் பயிர் சாகுபடி சங்கம் மற்றும்  தமிழ் மாநில தென்னை உற்பத்தியாளர் சங்கத்தினர் நேற்று கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.

கரூரில் பாமாயிலுக்கு பதிலாக அனைத்து ரேஷன் கடைகளிகளும் தேங்காய் எண்ணெய் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு அளித்தனர். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அழித்தனர். மனுக்களை கலெக்டர் பிரபுசங்கர் பெற்று, அதனை துறை அதிகாரியிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொள்ள  உத்தரவிட்டார்.

கூட்டத்தில் கரூர் மாவட்ட தென்னை மற்றும் வேளாண் பயிர் சாகுபடி சங்கம் மற்றும் தமிழ் மாநிலத் தென்னை உற்பத்தியாளர் சங்கத்தினர் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: தேங்காய் விலை சரிவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு விவசாயிகளிடம் தேங்காய்களை பெற்று நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். இதனால் அனைத்து தென்னை விவசாயிகளும் பயன்பெறுவார்கள். மத்திய அரசு கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை குறைந்த பட்ச ஆதார விலை ரூ.105.90 காசாக அறிவித்துள்ளது.

ஆனால் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும் 80, 90க்கு மேல் வாங்குவதில்லை. கரூர் மாவட்டம் ராயனூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்படுவதில்லை. கடந்த 2013ம் ஆண்டு கொப்பரை ரூ.95 விற்றது. ஆனால், தற்போது கூலி உயர்வு, இடுபொருள் விலை உயர்வு உள்ளதால் கொப்பரை தேங்காய் பருப்பை ரூ.150 வரை உயர்த்தி அரசே எடுத்துக்கொள்ள பரிந்துரை செய்ய வேண்டும்.

பாமாயிலுக்கு பதிலாக அனைத்து ரேஷன் கடைகளிலும் சத்து மிகுந்த தேங்காய் எண்ணெய்யை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்துணவு திட்ட சமையலுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் மாவட்டம், புகலூர் வட்டம் வேலாயுதம்பாளையத்தில் ஒரே ஒழுங்கு முறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும். நீரா பானம் தாய்ப்பாலுக்கு நிகரான இயற்கை பானம். இதனை இறக்குவதற்கு ஒரு விவசாயி விண்ணப்பித்தால் உடனடியாக பரிசீலனை செய்து அனுமதி வழங்க வேண்டும். தேங்காய் ஏற்று மதியில்  உள்ள இடர்பாடுகளை களைய அரசுகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அண்டை மாநிலங்களில் தென்னை  மரத்தில் கல் இறக்க அனுமதி உள்ளது போல, தமிழகத்திலும் கல் இரக்க அனுமதி தர வேண்டும், தென்னைக்கு சொட்டு நீர் பாசனம் மெலிந்த பிளாஸ்டிக் டியூப்க்கு பதிலாக புதிய முறையில் பிவிஎஸ் பைப் மூலம் பாய்ச்ச நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கரூர் மாவட்டத்தில் யூரியா, பொட்டாஷ்  விலை குறித்து அனைத்து உரக்கடைகளிலும் விலை பட்டியல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Published at : 20 Jul 2022 11:11 AM (IST) Tags: sales coconut oil ration kadai palmoil padhil

தொடர்புடைய செய்திகள்

125 கிடாய், 2600 கிலோ அரிசி:  ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட அசைவ விருந்து!

125 கிடாய், 2600 கிலோ அரிசி: ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட அசைவ விருந்து!

Corn and Curry Leaves Rice: ஊட்டச்சத்து மிகுந்த ஸ்வீட்கார்ன் - கருவேப்பிலை சாதம் -ரெசிபி இதோ!

Corn and Curry Leaves Rice: ஊட்டச்சத்து மிகுந்த ஸ்வீட்கார்ன் - கருவேப்பிலை சாதம் -ரெசிபி இதோ!

Spicy Paneer Curry: சுவையான பனீர் கிரேவி செய்வது எப்படி? ரெசிபி இதோ!

Spicy Paneer Curry: சுவையான பனீர் கிரேவி செய்வது எப்படி? ரெசிபி இதோ!

Paneer Broccoli Rice:ஆரோக்கியமான பனீர் ப்ரோக்கோலி ரைஸ் பவுல் - ரெசிபி இதோ!

Paneer Broccoli Rice:ஆரோக்கியமான பனீர் ப்ரோக்கோலி ரைஸ் பவுல் - ரெசிபி இதோ!

Sago Sarbath : ஜில்லுனு ஜவ்வரிசி சர்பத்.. கொளுத்தும் வெயிலுக்கு இதமான ரெசிப்பி இதோ..

Sago Sarbath : ஜில்லுனு ஜவ்வரிசி சர்பத்.. கொளுத்தும் வெயிலுக்கு இதமான ரெசிப்பி இதோ..

டாப் நியூஸ்

Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க

Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க

Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு

Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு

Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?

Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?