தீபாவளிக்கு என்ன ஸ்வீட் செய்யுறதுனு யோசிச்சிக்கிட்டு இருக்கீங்களா? வெறும் 7 பொருட்களை வைத்து அட்டகாசமான சுவையில் ஜாங்கிரி செய்யலாம்.  ஜாங்கிரியை மிகக்குறைந்த நேரத்தில் ஈசியா செய்து விட முடியும். இந்த முறையில் ஜாங்கிரி செய்தால் சரியான பதத்தில் கிடைக்கும். வாங்க ஜாங்கிரி எப்படி செய்வதென்று பார்க்கலாம். 


தேவையான பொருட்கள்


உளுத்தம் பருப்பு -3 கப், அரிசி - 1 தேக்கரண்டி,  மாவு புட் கலர் (உணவு நிறமி) – 1 சிட்டிகை, சர்க்கரை – 3 கப், ஏலக்காய் – 3, எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை


1லிருந்து 2 மணி நேரம் வரை உளுத்தம் பருப்புகளை தண்ணீரில் ஊறவைத்து, அதன் மீது இருக்கும் தோல்களை நீக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.


ஏலக்காய், சர்க்கரையை ஒன்றாக கலந்து நன்கு அரைத்து அடுப்பில் நெருப்பு மூட்டி, அதில் ஒரு கடாயை வைத்து இந்த சர்க்கரை, ஏலக்காய் கலவையை கொட்டி பாகு பதத்தில் காய்ச்ச வேண்டும்.( பாகு காய்ச்சும் போது அதிக அளவில் தண்ணீர் சேர்த்தால் பாகு பதம் வர நீண்ட நேரமாகும். எனவே போதுமான அளவு தண்ணீர் மட்டும் சேக்க வேண்டும்.)


இப்போது தோல் நீக்கப்பட்ட உளுத்தம்பருப்புகளை, அதிகம் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். இதில் சிவப்பு நிற புட் கலர் எனப்படும் உணவு நிறமியை சேர்த்துக்கொள்ள வேண்டும்.


இதனுடன் அரிசி மாவையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். இப்போது ஒரு சுத்தமான வெள்ளை துணியில் சில ஓட்டைகளை போட்டுகொண்டு, அந்த துணியில் இந்த மாவு கலவையை கொட்டி, முடிந்து கொள்ள வேண்டும்.


பின்பு மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அடுப்பில் வைத்து மிதமான வெப்பத்தில் காய வைக்க வேண்டும். எண்ணையை அதிக சூட்டில் கொதிக்க வைத்து, அதில் ஜாங்கிரியை பிழிந்தால் ஜாங்கிரி சரியான பக்குவத்தில் வராது.


இப்போது முடிந்து வைத்திருக்கும் அந்த துணியில் இருக்கும் மாவை, கடாயில் கொதித்து கொண்டிருக்கும் எண்ணெயில் மெதுவாக முதலில் ஒரு வட்டமாகவும், பிறகு அதன் மீது வட்ட, வட்டமாகவும் பிழிந்து விட வேண்டும்.


அதிக மொறுமொறுப்பாக ஜாங்கிரியை பொறிக்க விடாமல், இருபக்கம் நன்கு பொறித்ததும் அதை எடுத்து ஏற்கனவே காய்ச்சி வைத்துள்ள சர்க்கரை பாகில் 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து எடுத்தால் சுவையான ஜாங்கிரி தயார்.


மேலும் படிக்க


Coimbatore: பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்; பசுமை வனங்களை உருவாக்கி அசத்தல்!


Jigarthanda Double X: கலைதான் உன்னை தேர்ந்தெடுக்கிறது.. ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ஓர் விரிவான பார்வை!


Obbattu Recipe:சுவையான ஒப்பட்டு ரெசிபியை ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க! நாவிலே நிற்கும் சுவை!