மாறிவரும் வாழ்க்கை சூழல், உணவுப் பழக்கம் ஆகியவற்றின் காரணமாக செரிமான கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. குறிப்பாக பெண்களின் செரிமான ஆரோக்கியத்திற்கு ஆயுர்வேதம் மருத்துவத்தின் பரிந்துரைகளை காணலாம். 


செரிமான கோளாறு


நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிடுவதால் வயிற்றுப்புண், வயிற்றுப் பொருமல், மலச்சிக்கல் உள்ளிட்ட பல பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். செரிமான மண்டலம் சரியாக வேலை செய்யவில்லை என்றால் பல சிக்கல் ஏற்படும். வயிறு உப்பசம், எப்போதும் வயிறு நிரம்ப சாப்பிட்டது போன்று உணர்வு போன்றவை இருக்கும். இதற்கு மருந்துகளை நாடாமல் வீட்டில் இருக்கும் மூலிகைகளைப் பயன்படுத்தலாம் என்று சொல்கிறது ஆயுர்வேதம். ஆனால், செரிமான பிரச்னைகள் தொடர்ந்து நீடித்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. வீட்டு மூலிகைகள் செரிமான பிரச்சனையை தீர்க்க உதவும். ஆனால், நாள்பட்ட சிக்கல்களுக்கு எந்தவித பலனையும் தராது.  சாப்பிட்ட உணவு செரிமான ஆகவில்லையெனில் அடுத்தவேளை நிச்சயம் எந்த உணவையும் சாப்பிடக் கூடாது என்கிறது ஆயுர்வேதம். அவசியமெனில் கொஞ்சமாக சாப்பிடலாம். 


மலச்சிக்கல், நெஞ்செரிச்சல்:


பெண்களின் செரிமான மண்டலம் மாதவிடாய் சுழற்சி, மாதவிடாய் சுழற்சி முற்றிலுமாக நின்றுபோகும் காலம், கர்ப்ப காலம் என வெவ்வேறு சூழல்நிலைகளில் மாறுதலுக்குட்பட்டது. இந்த காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்திற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இது குடல் ஆரோக்கியத்திலும் முதன்மையான பங்கு வகிக்கிறது. செரிமான மண்டலம் சீராக செயல்படவில்லை என்றால் மலச்சிக்கல், பசியின்மை, நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படும்.




இது தொடர்பாக ஊட்டச்சத்து நிபுணர் காயத்ரி கூறுகையில், “ செரிமான கோளாறு காரணமாக உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது. மனச்சோர்வு, மூட் ஸ்விங்க்ஸ் போன்றவைகள் ஏற்படாலம். பெண்கள் மாதவிடாய் சுழற்சி தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பே சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். மாதவிடாய் சுழற்சி காலத்தில் கூட எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்தது, அதிக கொழுப்புள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.


சரிவிகித உணவும் சீரான உடற்பயிற்சியும் ஆரோக்கியமான வாழக்கைக்கு ஆயுர்வேதம் மருத்துவம் பரிந்துரைப்பது. சீரகம், இஞ்சி, பூண்டு, பெருஞ்சீரகம், ஏலக்காய், பெருங்காயம் உள்ளிட்டவற்றை உணவில் சேர்த்துகொள்ள வேண்டும். ஆரோக்கியமான கொழுப்புள்ளவைகள் மட்டுமே டயட்டில் இருக்கட்டும்.” என்று அறிவுறுத்தினார்.


ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆயுர்வேதம் மருத்துவம் பரிந்துரைப்பதன்படி, நாள்தோறும் பின்பற்றும் பழக்கங்கள் மிகவும் முக்கியமானது என்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுத்துகின்றனர்.




"உணவு முறையில் மாற்றம் செய்வது, வழக்கமான உடற்பயிற்சி, உணவு உட்கொள்ளும் நேரம், முறையான, போதுமான அளவு தூக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய தினசரி பழக்கம் என்பது  ஹார்மோன் சமநிலை மற்றும் செரிமான ஒழுங்குமுறைக்கு உதவும். பாக்கெட்களில் பேக் செய்யப்பட்ட உணவுகள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட ஸ்நாக்ஸ், மீண்டும் சூடுபடுத்தி உணவு சாப்பிடுவது ஆகியவற்றை தவிர்ப்பது மிகவும் முக்கியம்.  வழக்கமான உடல் பயிற்சிகள் உடலுக்குள் உள்ள ஆற்றல் ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் உடலுக்கும் மனதுக்கும் பல நன்மைகள் இது தசைகளை வலுப்படுத்தவும்,  கிடைக்கின்றன.


ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இதன் விளைவாக, உடல் அதிக ஆற்றல் மற்றும் புத்துணர்ச்சியை உணர்கிறது,  உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது, மேலும் செரிமானம் மண்டலம் மற்றும் ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. குடல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.” என்று அவர் எடுத்துரைத்தார்.


செரிமான மண்டலம் ஆரோக்கியத்திற்கு பின்பற்ற வேண்டியவைகள்



  •  பருவகால காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும்.

  •  இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள் மற்றும் தானியங்களை சாப்பிடுவது நல்லது.

  •  புரோபயாடிக் உணவுகள் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

  • உணவில் போதுமான நார்ச்சத்துக்களை, குறிப்பாக தாவர வகை நார்ச்சத்து இருப்பது நல்லது.

  • செரிமான மண்டலம் சீராக செயல்பட சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும்.

  • இஞ்சி, சீரகம், கொத்தமல்லி மற்றும் லவங்கப்பட்டை போன்ற மசாலாப் பொருட்களைச் சேர்ப்பது செரிமான திறனை மேம்படுத்த உதவும்.

  • உணவு சாப்பிடும் முன் எலுமிச்சை சாறு,  ஒரு சிட்டிகை ராக் சால்ட்,  இஞ்சி,  கலந்து தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு உதவுகிறது.

  • உணவுக்குப் பிறகு பெருஞ்சீரகம் மென்று சாப்பிடுவதும் உணவை ஜீரணிக்க உதவுகிறது.

  • காலை உணவு மிக முக்கியமான உணவு. மேலும், இரவு 7 மணிக்கு முன் இரவு உணவை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.


மாதவிடாய் சுழற்சி காலம், மெனோபாஸ் நேரம் போன்ற நேரத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுகள், பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும். தினமும் 10 நிமிடங்கள்  உடற்பயிற்சி செய்வது அவசியம். 8 மணி நேர தூக்கம் முக்கியம். மாதவிடாய் சுழற்சி நாட்களில் செரிமான திறனில் மாற்றம் ஏற்படும். அதை கவனித்து அதற்கு ஏற்றவாறு உணவுகளை சாப்பிட வேண்டும். ஆரோக்கியம் இல்லாத உணவுகளை சாப்பிட்டால் உடல்நல பிரச்னைகளை ஏற்படும்.


டீடாக்ஸ் நீர்


புதினா, எலுமிச்சை, வெள்ளரி இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் தண்ணீரை வடிகட்டி குடிப்பது, உங்கள் ஆரோக்கியத்தை வெகுவாக மேம்படுத்துவதோடு, அழகான சருமத்தையும் உங்களுக்கு வழங்கும்.


டீடாக்ஸ் தண்ணீர் என்றால் வெள்ளரிக்காய், எலுமிச்சை மற்றும் புதினா தண்ணீர் போன்றவைதான்.


இவற்றை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் தண்ணீரை வடிகட்டி குடிப்பது, உங்கள் ஆரோக்கியத்தை வெகுவாக மேம்படுத்துவதோடு, அழகான சருமத்தையும் உங்களுக்கு வழங்கும்.