ஆந்திர உணவுகள் என்றாலே காரசாரமாக இருக்கும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். நெய், பருப்பு பொடி சாப்பிடுவதற்காகவே ஏராளமானோர் அந்திர மெஸ் செல்வது உண்டு. அந்த அளவிற்கு ஆந்திர உணவுகள் பிரபலம். இப்போது நாம் ஆந்திராவில் மிகவும் பிரபலாமான கார முட்டை தோசை ரெசிபி குறித்து தான். பொதுவாகவே முட்டை தோசை சுவையாக தான் இருக்கும் அதிலும் இந்த கார முட்டை தோசையின் சுவை அலாதியாக இருக்கும். இந்த தோசையை குறைந்த நேரத்தில் எளிமையாக செய்து விட முடியும். வாங்க சுவையான கார முட்டை தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
2 கப் தோசை மாவு, 3முட்டை, எண்ணெய், மிளகாய் சட்னி, 15 பூண்டு பல் ,4-5 வர மிளகாய் ,4 சின்ன வெங்காயம், உப்பு தேவையான அளவு, 2 டேபிள்ஸ்பூன் நலலெண்ணெய்.
செய்முறை
பூண்டு, வரமிளகாய், சின்ன வெங்காயம், 3 சிட்டிகை உப்பு ஆகிய பொருட்களை மிக்ஸியில் மிக்ஸியில் சேர்த்து, அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.
பிறகு அடுப்பில் கடாய் வைத்து அதில் 3 ஸ்பூன் அளவு எண்ணெய் அல்லது உங்களுக்குத் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து, அதில் அரைத்த விழுதை சேர்க்க வேண்டும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து, அரைத்த விழுது, எண்ணெயுடன் கலந்து, எண்ணெய் பிரிந்து பச்சை வாசம் போகும் வரை கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும். அவ்வளவுதான் தோசை தயாரிப்பதற்கான சட்னி தயார்.
வழக்கம் போல் தவாவில் தோசை ஊற்றி விட்டு, பின் அதன் மீது முட்டையை உடைத்து ஊற்றி, மிளகாய் சட்னியும் சேர்த்து தோசையின் அனைத்து பகுதிகளிலும் படும்படி பரப்பி விட வேண்டும்.
தோசை சற்று முறுகல் ஆகி வரும் போது திருப்பிப் போட்டு 30 வினாடிகள் வேக விட்டு எடுத்து விடலாம். அவ்வளவுதான் சுவையான கார முட்டை தோசை தயார். இந்த தோசையை உங்களுக்குப் பிடித்த சட்னியுடன் வைத்து சாப்பிடலாம்.
அல்லது, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி,சாம்பாருடன் பரிமாறலாம் வைத்து சாப்பிடலாம். வெறுமனே சாப்பிட்டாலும் இந்த தோசை நல்ல சுவையாகவே இருக்கும்.