ஜெல்லி மிட்டாய் நாம் காசு கொடுத்து கடைகளில் வாங்குவோம். குழந்தைகளுக்கு கடைகளில் வாங்கி கொடுப்பதை பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புவதில்லை. அப்படிப்பட்டவர்கள் வீட்டிலேயே ரொம்ப எளிமையான முறையில் இயற்கையாக கிடைக்க கூடிய பழங்களை பயன்படுத்தி ஜெல்லி செய்யலாம்.

  


தேவையான பொருட்கள் 


கருப்பு நிற திராட்சை பழங்கள் - 200 கிராம், சர்க்கரை - 2 ஸ்பூன், கான்பிளவர் மாவு - 2 ஸ்பூன்.


செய்முறை


திராட்சை பழத்தை தண்ணீரில் கழுவி எடுத்து அதை மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்து ஜூசை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.


அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் திராட்சை பழ சாரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.


இதனுடன் 2 ஸ்பூன் சர்க்கரை, 2 ஸ்பூன் சோள மாவு சேர்த்து கட்டிப்படாமல் கலக்கிக் கொள்ள வேண்டும்.  பின்பு அடுப்பை பற்ற வைக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து இதை கரண்டியால் கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். 


கெட்டிப் பதம் வரும் வரை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அதவாது ஜெல் பதம் வரை தோராயமாக 14 நிமிடங்கள் ஆகலாம். 


இப்போது ஃப்ரீசரில் வைக்கக்கூடிய ட்ரேவில் எண்ணெய் தடவி இந்த ஜெல்லை ஊற்றி ஆறியதும்  ஃப்ரீஸரில் வைக்க வேண்டும்.


நான்கு மணி நேரத்திற்கு பின் ட்ரேவை வெளியே எடுத்துப் பார்த்தால், ஜெல்லி நன்றாக டிரேவில் செட் ஆகி இருக்கும்.


இதை கத்தியால் வேண்டிய அளவுகளில் வெட்டி எடுத்து, சர்க்கரையில் பிரட்டி எடுத்தால் குழந்தைகளுக்கு பிடித்த ஜெல்லி தயார். 


மேலும் உங்களுக்கு பிடித்த பழத்தை கொண்டு இதே முறையில் நீங்கள் ஜெல்லி செய்து விடலாம். இது வீட்டிலேயே இயற்கையான முறையில் செய்யப்படும் ஜெல்லி என்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கும். 


மேலும் படிக்க 


Beetroot Chutney : ஆரோக்கியமான பீட்ரூட் சட்னி.. இப்படி செய்தால் சுவை சூப்பரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க..


Rice Chips : மக்களே.. சமைத்த சாதம் மீதமாகிவிட்டதா? வற்றலும், ஆப்பமும் ரெடி பண்ணலாம் வாங்க..


Beetroot Cutlet: இரும்புச்சத்து நிறைந்த பீட்ரூட்டில் சுவையான கட்லெட் செய்யலாம் - செய்முறை இதோ!