கச்சோரிகள் மாலை நேரத்திற்கு ஏற்ற வட இந்திய ஸ்நாக்ஸ். ஆனாலும் இப்போது இங்கு இதுதான் பிரபலம். உருளைக்கிழங்கு பட்டாணி, ராகி ரொட்டி உள்ளிட்டவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த கச்சோரிகள் உடலுக்கு ஆரோக்கியமானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த கச்சோரியை விரும்பி சாப்பிடுவர். வாங்க கச்சோரி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்



  • 1 டீஸ்பூன் எண்ணெய்

  • 1 டீஸ்பூன் சீரகம்

  • 2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது

  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்

  • 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்

  • உப்பு சுவைக்க

  • 2 வேகவைத்த உருளைக்கிழங்கு

  • வேகவைத்த பட்டாணி

  • புதிய கொத்தமல்லி இலைகள்

  • 1 ராகி ரொட்டி, வெட்டப்பட்டது

  • பொரிப்பதற்கு எண்ணெய்


செய்முறை


1. ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானாதும், சீரகம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

 

2. வேகவைத்த உருளைக்கிழங்கு நன்றாக மசித்து  இதனுடன் சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.

 

3. வேகவைத்த பட்டாணி மற்றும் கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து வேகவைக்க வேண்டும். உருளைக்கிழங்கு மசாலாக்களுடன் நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை அடிக்கடி கிளறி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும். பின்பு இதை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்துக்கொள்ள வேண்டும். 

 

4. ராகி ரொட்டி துண்டுகளை எடுத்து, விளிம்புகளை அகற்றிவிட்டு வட்ட வடிவில் வெட்டிக்கொள்ள வேண்டும். 

 

5. துண்டின் மையத்தில் தட்டவும், பின்னர் அதை தண்ணீரில் நனைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

6. பிரெட்டின் மையப்பகுதியில் உருளைக்கிழங்கு கலவையை வைக்க வேண்டும். 

 

7. மற்றொரு பிரெட் துண்டை இதன் மீது வைத்து அதன் விளிம்புகளை மெதுவாக அழுத்தி கச்சோரியை மூடவும்.

 

8. அடுப்பில் ஒரு கடாயை வைத்து கச்சோரியை பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெயை சேர்க்க வேண்டும்

 

9. எண்ணெய் சூடானதும், தயாரிக்கப்பட்ட கச்சோரிகளை எண்ணெயில் விட்டு பொரித்தெடுக்க வேண்டும். ( அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும். அப்போது தான் கச்சோரிகள் சரியாக வெந்து வரும்)

 

10.இருபுறமும் பொன்னிறமாகும் வரை கச்சோரிகளை வேக விட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். 

 

11.அவ்வளவுதான் சுவையான கேழ்வரகு ரொட்டி கச்சோரிகள் தயார். 

 

மேலும் படிக்க