கோங்குரா கொடி புலாவ் ரெசிபி சிக்கன், புளிச்சக்கீரை, மசாலா உள்ளிட்டவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த புலாவ் சாப்பிடுவதற்கு நல்ல சுவையாக இருக்கும். நாம் வழக்கமாக செய்யும் புலாவ் மற்றும் பிரியாணி ஆகியவற்றின் சுவையில் இருந்து இந்த கோங்குரா கொடி புலாவின் சுவை வேறுபட்டு இருக்கும். இந்த புலாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர். இந்த ரெசிபியை வெறும் 30 நிமிடங்களில் செய்து முடித்துவிட முடியும். வாங்க கோங்குரா கொடி புலாவ் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்


2 கப் பாஸ்மதி அரிசி, 1 கோழி சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டது, 1 கப் புளிச்சக்கீரை நன்றாக நறுக்கியது, 2 வெங்காயம் பொடியாக நறுக்கியது, 3 கிராம்பு,  பூண்டு, துண்டு துண்தாக நறுக்கப்பட்டது, 1 இன்ச் இஞ்சி, நறுக்கியது, 2 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது, 1 தேக்கரண்டி சீரகம், 1 தேக்கரண்டி கடுகு, 1 தேக்கரண்டி கொத்தமல்லி, 1 டீஸ்பூன் சீரக தூள், 1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்,  உப்பு - சுவைக்கேற்ப, 2 டீஸ்பூன் எண்ணெய், 2 கப் தண்ணீர்.


செய்முறை


1. அரிசியைக் கழுவி தண்ணீரில் சுமார் 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.


2. ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, சீரகம், கடுகு, கொத்தமல்லியை சேர்த்து தாளிக்க வேண்டும்.


3. வெங்காயத்தைச் சேர்த்து அவை கண்ணாடிப்பதம் வரும் வரை வதக்க வேண்டும்.


4. பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.


5. தற்போது சிக்கன் துண்டுகளை சேர்த்து அது முழுமையாக வேகும் வரை வேக வைக்க வேண்டும். பின் புளிச்சக்கீரை, பச்சை மிளகாய், சீரக தூள், கொத்தமல்லி தூள் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும். உப்பு சேர்த்த பின் மேலும் சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.


7. ஊறவைத்து தண்ணீரை வடித்து வைத்துள்ள அரிசியை இதில் சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும். இப்போது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.


8. தீயைக் குறைத்து வைத்து,கடாயை மூடி, அரிசியை வேக வைக்க வேண்டும். தண்ணீர் முழுவதுமாக வற்றி அரிசி நன்றாக வேக வேண்டும். இந்த அரிசி வேக சுமார் 15-20 நிமிடங்கள் ஆகும்.


9.ஒரு முட்கரண்டி கொண்டு கோங்குரா கொடி புலாவை கிறிவி விட்டு பரிமாறலாம். 


மேலும் படிக்க


Kerala Blast: கேரளாவில் கிறிஸ்தவர்கள் ஜெபக்கூட்டத்தில் டிபன் பாக்ஸ் குண்டுவெடிப்பு.. ஒருவர் உயிரிழப்பு.. 36 பேர் காயம்


CM Stalin: ”அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்க" - உலக சிக்கன தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!


Strokes signs: பெண்களை அதிகம் பாதிக்கும் பக்கவாதம் - முக்கிய அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?