தேவையான பொருட்கள்
செய்முறை
இஞ்சியை நன்றாக கழுவி தோல் நீக்கி, மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும் ( துண்டுகளாக்கி அரத்தால் நன்கு அரைபடும்).
புளியை கரைத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த இஞ்சி விழுது சேர்த்து நன்கு வதக்கி மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி விட்டு, புளிக்கரைசல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
எண்ணெய் பிரிந்து கட்டியான பதத்தில் வந்த உடன் சிறிதளவு வெல்லம் சேர்த்து இறக்கினால் சத்துள்ள இஞ்சி பச்சடி தயார். இதனை இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை உபயோகித்துக்கொள்ளலாம்.
இஞ்சியின் நன்மைகள்
வயிற்றில் அசௌகரியம், அதாவது நெஞ்சு கரிப்பு போன்ற பிரச்சனைகளை சரி செய்ய இஞ்சி உதவுகிறது.
செரிமான மண்டலம் மெதுவாக செயல்படும் போது இந்த நெஞ்சு கரிப்பு ஏற்படும், அதற்கு ஒரே தீர்வாக இஞ்சி இதற்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
இஞ்சி சாப்பிடுவது, செரிமான மண்டலம் துரிதமாக அதன் விளைசெயல்பட உதவும் என்றும் அஜீரண பிரச்சனைகளை சரி செய்ய உதவும் என்றும் சொல்லப்படுகிறது.
இஞ்சியில் ஜிஞ்சரால் எனப்படும் வேதியியல் கலவை உள்ளது. இந்த கலவை நம் நாக்கில் உள்ள காரசுவை ஏற்பிகளை செயல்பட தூண்டி விடுவதாக கூறப்படுகிறது
உடனடியாக உடலுக்கு ஒரு சத்து வேண்டுமானால், இஞ்சி சாலட் செய்து சாப்பிடலாம்.
இஞ்சியிடம் இருக்கும் ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி இன்பிளமேட்டரி தன்மைகளானது நம் உடலை சில வியாதிகள் அண்டாமல் பாதுகாப்பதுடன், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
நாம் கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்ட பின் ஏற்படும் உடல் வலிகளை நீக்கும் தன்மை இஞ்சிக்கு உண்டு என கூறப்படுகிறது.
மேலும் படிக்க
Lotus Seeds Curry: நாண், சாப்பாத்திக்கு சூப்பர் சைடிஷ்... தாமரை கறி இப்படி செய்து பாருங்க....
Aval Cutlet : டேஸ்டியான அவல் கட்லெட்.. ஈசியா செய்யலாம்... செய்முறை இதோ...
Prawn Gravy:செட்டிநாடு ஸ்டைல் இறால் கிரேவி... இப்படி செய்தால் நாவூறும் சுவையில் இருக்கும்...