தேவையான பொருட்கள்
தாமரை விதைகள் - 50 கிராம், பெரிய வெங்காயம் - 3, தக்காளி - இரண்டு, சீரகம் - ஒரு டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் -கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், முந்திரி பருப்பு -10, பச்சை மிளகாய் - ரெண்டு, இஞ்சி - 1 சிறு துண்டு, பூண்டு - 5 பற்கள், ஏலக்காய் - 2, பட்டை -ஒன்று, கிராம்பு - 3, உப்பு - தேவையான அளவு, வெண்ணெய் - தேவையான அளவு, கரம் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி, நறுக்கிய மல்லி இலை – சிறிதளவு, பிரஷ் கிரீம் – தேவையான அளவு.
செய்முறை
அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு வெண்ணெய் சேர்த்து உருக விட வேண்டும்.
பின் அதில் 50 கிராம் அளவிற்கு தாமரை விதைகளை சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு மீண்டும் வெண்ணெய் சேர்த்து, உருகியதும், அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து அதனுடன் சீரகம் மற்றும் சோம்பு சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் பொடியாக நறுக்கிய ஒரு ஸ்பூன் இஞ்சி , பொடியாக நறுக்கிய ஒரு ஸ்பூன் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
இதனுடன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்க வேண்டும்.
இவை வதங்கி வரும் பொழுது 10 முழு முந்திரி பருப்புகளை சேர்த்து வதக்குங்கள். பின்னர் பொடிப்பொடியாக நறுக்கிய தக்காளி பழங்களை சேர்த்து நன்கு மசிய வதக்க வேண்டும்.
பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும்.
அடுப்பை அணைத்து விட்டு இந்த கலவையை ஆற விட வேண்டும். ஆறியதும் ஒரு மிக்ஸர் ஜாரில் சேர்த்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவிற்கு வெண்ணெய் சேர்த்து உருக விட வேண்டும்.
பின்னர் அதில் கால் டீஸ்பூன் அளவுக்கு கரம் மசாலா சேர்த்து லேசாக வதக்க வேண்டும்.
பின் மீதம் இருக்கும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும், அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடுங்கள்.
இவை நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, நீங்கள் வறுத்து வைத்துள்ள தாமரை விதைகளை சேர்த்து கலந்து விட வேண்டும்.
பின்னர் அடுப்பை அணைத்து, பிரஷ் க்ரீம் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான தாமரை விதை கறி தயார்.