தேவையான பொருட்கள் 


முட்டை - 1 பச்சரிசி மாவு - 2 டீஸ்பூன் மைதா மாவு பிரெட் க்ரம்ப்ஸ் வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 கொத்தமல்லித்தழை, எண்ணெய் தேவையான அளவு, உப்பு- தேவையான அளவு.


செய்முறை


முதலில் கடாயில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் நண்டுகளை போட்டு வேகவிட வேண்டும்.


நண்டு நன்றாக வெந்ததும், ஆறவைத்து ஓடுகளை உடைத்து சதைகளை மட்டும் தனியாக எடுத்து நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.


அதனுடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், மைதா மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து வடை மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.


பிறகு, இதில் இருந்து கொஞ்சமாக எடுத்து லாலிபாப் வடிவில் செய்து அதில் குச்சியோ அல்லது நண்டின் கால்களையோ செருகலாம்.


கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். இதற்கிடையே, ஒரு கிண்ணத்தில் முட்டையை அடித்து வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் பிரெட் க்ரம்ஸ் தயாராக வைத்துக் கொள்ளவும்.


எண்ணெய் சூடானதும், ஒரு லாலிபாப்பை எடுத்து, முட்டையில் டிப் செய்து, பிறகு பிரெட் க்ரம்ப்ஸில் புறட்டி எடுத்து எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான நண்டு லாலிபாப் தயார்.


நண்டின் நன்மைகள் 


நண்டு சப்பிடுவதால், வைட்டமின் ஏ கிடைக்கிறது. இது கண்பார்வை மேம்படவும்,  கண் புரை, கருவிழி சிதைவு ஆகிய நோய் ஏற்படாமல் தடுக்கவும் உதவும் என்று சொல்லப்படுகிறது.


இதில் காப்பர், வைட்டமின் பி2, செலினியம் ஆகியவை காணப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் நண்டு சாப்பிடுவது நல்லது என கூறப்படுகிறது. இதில் காணப்படும் செலினியம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்குவிக்க உதவும். 


நண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானம் ஏற்படாது என்று சொல்லப்படுகிறது.


காயங்கள் விரைந்து குணமாகவும்,  நண்டு உணவுகள் கை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. இதில் உள்ள ஜின்க், வைட்டமின் பி 12, வைட்டமின் சி போன்றவை எரித்ரோசைடுகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்வை என்றும், இது புதிய திசுக்களை உருவாக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.


நண்டு உணவில் உள்ள ஒமேகா-3, கொழுப்பு அமிலங்கள் இதயத்திற்கு நல்லது என்று கூறப்படுகிறது. இருந்த போதிலும் கர்பிணிகள் நண்டு சாப்பிட கூடாது என சொல்லப்படுகிறது. நண்டை மிதமாக சாப்பிட்டு அதன் பயன்களை பெறலாம். 


மேலும் படிக்க 


Rajma Masala : சாதம்.. தோசை.. இட்லிக்கு ஏற்றது.. புரதச்சத்து நிறைந்த ராஜ்மா மசாலா.. ரெசிப்பி இதோ..


Veld Grape Pickle: நாவில் எச்சில் ஊறும் சுவையில் பிரண்டை ஊறுகாய்... செய்முறை இதோ...