உலகெங்கிலும் உள்ள பல உணவு வகைகளில் பிரதானமானது அரிசி, குறிப்பாக இந்தியாவில், அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் 'வெள்ளை அரிசி' தவிர்க்க முடியாத இடத்தை பெற்றுள்ளது. பிரியாணியில் தொடங்கி பழைய சோறு வரை வித்தியாச வித்தியாசமான முறையில் நாம் அதை அனுதினமும் உட்கொள்கிறோம். ஆனால் சமீப காலமாக அதில் சில குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு பலர் அதனை ஒதுக்கும் மனநிலைக்கு வந்துவிட்டனர். அரிசி மிகவும் பதப்படுத்தப்படுகிறது என்பது உண்மைதான். தோலுரித்து அரைக்கும்போது, அதன் நார்ச்சத்து பறிக்கப்பட்டு, பல சத்துக்களை இழக்கிறது என்பதும் உண்மைதான். மேலும் அதன் அதிக மாவுச்சத்து உடல் எடையை கூட்டுகிறது என்பதும் உண்மைதான், எதுவும் மறுப்பதற்கில்லை. ஆனால் நம் உணவில் இருந்து அரிசியை முற்றிலும் தவிர்க்க வேண்டுமா? என்ற கேள்விக்கு ஊட்டச்சத்து நிபுணரான ராஷி சௌத்ரி கூறும் பதில் ஆச்சரியப்படுத்துகிறது.


இன்ஸ்டாகிராம் பதிவு


இன்ஸ்டாகிராம் பதிவில் அவர், PCOS, எண்டோமெட்ரியோசிஸ், IBS, இன்சுலின் உணர்திறன், IBS அல்லது SIBO ஆகியவற்றால் பாதிக்கபட்ட ஒருவர் கோதுமையில் இருந்து அரிசிக்கு மாறுவது நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர் ராஷி சௌத்ரி தெரிவித்தார். வெள்ளை அரிசியை உண்பதற்கான சரியான வழி பற்றிய சில ஆலோசனைகளையும் அவர் பகிர்ந்து கொண்டார். 



வெள்ளை அரிசி ஆரோக்கியமானதா?



  • முதலாவதாக, அரிசி ஆற்றலை அள்ளித்தரும் மிக முக்கியமான மூலமாக செயல்படுகிறது. இதன் எளிதில் ஜீரணிக்கக்கூடிய கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன, அவை விரைவான மற்றும் திறமையான எரிபொருளை வழங்குகின்றன. இது விளையாட்டு வீரர்களுக்கும் ஆற்றல் அதிகரிப்பு தேவைப்படுபவர்களுக்கும் சிறந்த தேர்வாக அமைகிறது.

  • அரிசி வயிற்றுக்கு மென்மையாக இருக்கும், இது செரிமான பிரச்சினைகள் கொண்ட நபர்களுக்கு ஏற்றது.


தொடர்புடைய செய்திகள்: WI vs NED WC Qualifiers: வெ. இண்டீசை புரட்டி எடுத்த நெதர்லாந்து..சூப்பர் ஓவரில் 30 ரன்கள் விளாசி அபார வெற்றி..!



  • அரிசி நல்ல ஊட்டச்சத்து பட்டியலையும் கொண்டுள்ளது. இதில் இரும்பு, ஃபோலேட் மற்றும் பி வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனால் இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது. அரிசி இயற்கையாகவே பசையம் இல்லாதது, எனவே இது பசையம் சாப்பிடக்கூடாதவர்கள் அல்லது செலியாக் நோய் உள்ளவர்களுக்கு பாதுகாப்பான வுணவாக அமைகிறது.

  • PCOD, IBD மற்றும் முன்னர் குறிப்பிடப்பட்ட பிற சிக்கல்கள் இருந்தால் அரிசி சாப்பிடுவது ஒரு நல்ல முடிவு. ஆனால் அரிசியின் பலன்களை அனுபவிப்பதற்கு அதன் மிதமான தன்மையே முக்கியமானது.


ஊட்டச்சத்து நிபுணர் ராஷி சௌத்ரி வெள்ளை அரிசியை உட்கொள்ளும்போது பின்பற்ற வேண்டிய பின்வரும் குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.



அரிசி சாப்பிடும்போது மனதில் கொள்ள வேண்டியவை:



  1. அதனுடன் போதுமான காய்கறிகள் அல்லது புரதம் சேர்த்து சாப்பிட வேண்டும், அப்போதுதான் அதிக அளவு சாப்பிடுவதை தவிர்க்க முடியும்.

  2. உங்களுக்கு குடல் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்தால், சிவப்பு அரிசி அல்லது கோதுமை சாப்பிடுவதற்கு பதில் வெள்ளை அரிசியை சாப்பிடுங்கள். சிவப்பு அரிசியில் உள்ள ஆர்சனிக் அளவை உங்கள் குடலால் சில சமயங்களில் கையாள முடியாமல் போகலாம்.

  3. அரிசியை தயாரிக்க நெய் தேங்காய் எண்ணெய், வெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் போன்ற சிறந்த கொழுப்பு கொண்ட விஷயங்களை பயன்படுத்தவும். இதோடு சேர்த்து நார்ச்சத்து உட்பட, அரிசியில் இல்லாத சத்துக்களை கொண்ட உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும்.

  4. கடைசியாக ஒரே ஒரு விஷயம் மறக்காமல் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள், அரிசியை உட்கொள்ளும் அளவு அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளவும்.