இந்தியாவில் பண்டிகை, விழா, கொண்டாட்டங்கள் என்றாலே, விருந்துகள் தான் அதில் முதலிடம் வகிக்கும். அதிலும் இஸ்லாமிய பண்டிகை என்றால் பிரியாணி இல்லாமல் இல்லை. ஈத்-அல்-அதா என்று கொண்டாடப்படும் பக்ரித் பண்டிகை நெருங்கிவிட்டது. ஈத் அல்-ஆதா, இஸ்லாமிய நாட்காட்டியின்படி, து அல்-ஹிஜ்ஜாவின் 10 வது நாளில் வருகிறது. மேலும் இந்த ஆண்டு அது ஆகஸ்ட் 1, 2020 அன்று இந்தியாவில் கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லோரும் மட்டன் சாப்பிட தயாராகிவிட்டோம். நாடு முழுவதும் உள்ள மசூதிகள் அழகான விளக்குகளில் ஒளிர்கின்றன. மண்ணடி, திருவல்லிக்கேணி ஹை ரோடு போன்ற ஏரியாக்களில் சாலையோரங்களில் முரட்டு ஆடுகள் ஏற்கனவே கட்டப்பட்டு விட்டன. 


மட்டன் யாக்னி புலாவ்


எல்லோரும் பிரியாணி சாப்பிட தயாராகிவிட்டோம். ஆனால் பக்ரீத் என்றால் பிரியாணி மட்டும் அல்ல, ஷீர் குர்மா முதல் நிஹாரி வரை, ஈத் ஒரு மாமிச உணவுகளின் சங்கமம். அது போல மட்டன் புலாவ் ஒரு சுவையான, வயிற்றுக்கு பதமான ஒரு மட்டன் உணவு ஆகும். யாக்னி என்பது பொதுவாக ஆட்டிறைச்சியை உள்ளடக்கிய ஒரு வகையான குழம்பு. அதனை இணைத்து மட்டன் யாக்னி புலாவ் என்ற உணவு மிகவும் பிரபலம். வெங்காயம் மற்றும் மசாலா மற்றும் இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பிரிஞ்சி இலைகள் போன்ற மாசலாக்களை ஆட்டிறைச்சியோடு இணைத்து செய்யப்படும் இந்த உணவின் ருசி பலரை சுண்டி இழுக்கும்.



மட்டன் யாக்னி புலாவ் செய்ய தேவையான பொருட்கள்:


ஆட்டிறைச்சிக்கு:


1 கிலோ ஆட்டிறைச்சி (துண்டுகளாக வெட்டப்பட்டது)


2 டீஸ்பூன் மல்லி


1 வெங்காயம், நறுக்கியது


2 துண்டுகள் இஞ்சி


12 பூண்டு பட்டைகள்


2 பிரிஞ்சி இலைகள்


4-5 பச்சை ஏலக்காய்


2 இலவங்கப்பட்டை


6-7 கிராம்பு


புலாவுக்கு:


3-4 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்


2 பிரிஞ்சி இலைகள்


6-7 கிராம்பு


4-5 இலவங்கப்பட்டை


4-5 ஏலக்காய்


7-8 வெங்காயம் (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)


2 டீஸ்பூன் அரைத்த இஞ்சி


4 டீஸ்பூன் அரைத்த பூண்டு


1 ஜாதிக்காய், துருவியது


1 தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள்


2 கப் பாஸ்மதி அரிசி


4 கப் மட்டன் வேகவைத்த நீர்


உப்பு - தேவையான அளவு


தொடர்புடைய செய்திகள்: WI vs NED WC Qualifiers: வெ. இண்டீசை புரட்டி எடுத்த நெதர்லாந்து..சூப்பர் ஓவரில் 30 ரன்கள் விளாசி அபார வெற்றி..!


மட்டன் யாக்னி புலாவ் செய்முறை:


ஆட்டிறைச்சி:


வெங்காயம் மற்றும் அனைத்து மசாலாப் பொருட்களையும் ஒரு சிறிய துணியில் கட்டி, இறைச்சியுடன் சேர்த்து சமைக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.



புலாவ்:



  1. அடி கனமான பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கவும். அதில் முழு மசாலாவையும் சேர்க்கவும்.



  1. எண்ணெய் பொரிய ஆரம்பித்தவுடன், வெங்காயத்தை சேர்க்கவும். பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.

  2. இஞ்சி பூண்டு சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.

  3. ஜாதிக்காய் மற்றும் இலவங்கப்பட்டை தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

  4. சமைத்த மட்டன் மற்றும் அரிசியை கலக்கவும்.

  5. அதன் மேல் உப்பு தூவி தொடர்ந்து கிளறவும்.

  6. மட்டன் வேகவைத்த தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

  7. நீராவி வெளியேறாமல் இருக்க ஒரு கனமான மூடியால் மூடி வைக்கவும்.

  8. குறைந்த வெப்பத்தில் சுமார் 15-20 நிமிடங்கள் வைத்து இறக்கவும்.

  9. ரைதா உடன் சூடாக பரிமாறவும்.