நரம்பியல் அமைப்பின் செயல்திறன் நாம் உண்ணும் உணவைப் பொறுத்துதான் உள்ளது. நாள் முழுவதும் நாம் எவ்வளவு மன அழுத்தத்தை உணர்கிறோம் என்பதை தீர்மானிப்பது அதுதான். பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் இரத்த சர்க்கரை அளவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் அது பொதுவாக மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும் கருதப்படுகிறது.


மன அழுத்தத்தை குறைக்கும் ஊட்டச்சத்து


உணவில் சில ஊட்டச்சத்துக்களை சேர்ப்பதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம் என கூறப்படுகிறது. மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான சிறந்த முறை உணவில் இருந்து குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்களை உட்கொள்வதுதான். ஆய்வுகளின்படி, மன அழுத்தத்தில் இருக்கும்போது உங்கள் உடலுக்கு அதிக வைட்டமின்கள் பி மற்றும் சி, செலினியம், மெக்னீசியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. சில பதட்ட எதிர்ப்பு உணவுகள் பதற்றத்தைக் குறைப்பதற்கும் உங்கள் உடலையும் மனதையும் அமைதிப்படுத்துவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவை யாவை என்று அறிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.


மன அழுத்தத்தின் போது உட்கொள்ள வேண்டிய சிறந்த 5 மனநிலையை அதிகரிக்கும் உணவுகள்:



அஸ்வகந்தா:


மன அழுத்தத்தைக் குறைக்கும் திறனுக்காக இது மிகவும் பிரபலமானது. உறங்குவதற்கு முன் அஸ்வகந்தா தேநீர் அருந்துவது, மன அழுத்தத்தைக் குறைக்கவும், நிம்மதியான உறக்கத்திற்குத் தயாராகவும் நல்லது. கார்டிசோல், மன அழுத்த ஹார்மோன் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் சுரப்பை இந்த மருத்துவ மூலிகையின் உதவியுடன் குறைக்கலாம்.


தொடர்புடைய செய்திகள்: Leo movie song: ’நான் ரெடி’ பாட்டில் ரவுடிசமா..? நடிகர் விஜய் மீது போலீஸில் புகார்..!


பாதாம்:


மன அழுத்தத்தைக் குறைக்கும் உணவான பாதாமில் மெக்னீசியம், சிங்க், வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி2 ஆகியவை நிறைந்துள்ளன. செரோடோனின் எனப்படும் மகிழ்ச்சியான ஹார்மோன், இவற்றின் உதவியுடன் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.


A2 பால்:


புற்கள் சாப்பிடும் பசுக்களில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பாலில் வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆரோக்கியமான ஆக்ஸிஜனேற்றங்கள் அதிக அளவில் உள்ளன, அவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடவும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.



கெமோமில் டீ:


அமைதியின் அடையாளமாக கூறப்படும் கெமோமில் பூவில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர், உடலின் இயற்கையான செரோடோனின் மற்றும் மெலடோனின் உற்பத்தியை அதிகரிக்கிறது, இது உங்களை அமைதியாகவும் ஓய்வாகவும் உணர வைப்பதுடன், மகிழ்வுடன் இருக்க வைக்கிறது.


வாழை:


வாழைப்பழத்தில் காணப்படும் ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி6 உள்ளிட்ட பி வைட்டமின்கள் செரோடோனின் தொகுப்புக்கு மிகவும் அவசியம் ஆகும், இது மனநிலையை மேம்படுத்துவதுடன், பதட்டத்தை குறைக்கிறது.