பொதுவாக காலையில் எழுந்தவுடன் எல்லோருக்கும் புத்துணர்ச்சி ஊட்டும் பானமாக அமைவது காபியும், தேநீரும் தான். சிலருக்கு காஃபி இல்லாமல் அந்த நாள் தொடங்காது. இந்த காஃபியை அதிகமாக எடுத்துக் கொண்டால் பெண்களுக்கு உடலில் பல்வேறு நோய்கள், ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும் என சொல்லப்படுகிறது.
காஃபியை அதிகமாக உட்கொண்டால் பெண்களுக்கு PCOS எனப்படும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் ஏற்படலாம் என கூறப்படுகிறது. காஃபியில் உள்ள காஃபின் ஒருவரின் நரம்பு மண்டலம் மற்றும் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.
ஆகவே பெண்களுக்கு PCOS இருப்பது கண்டறியப்பட்டால் அவர் தவிர்க்க வேண்டிய பொருட்களில் இந்த காஃபியும் ஒன்றாகும். காஃபியில் உடலுக்கு புத்துணர்வூட்டும் தன்மை இருந்தாலும் , அதனை அதிகப்படியாக அருந்துவது உடலில் பல்வேறு வகையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இது பெண்களின் கர்ப்பப்பையில் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்.) வளர்ச்சியை தூண்டிவிட்டு மாதவிடாய் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. பெண்களுக்கு மாதவிடாய் ஒழுங்கற்ற முறையில் வருவது அதிகப்படியான ரத்தப்போக்கு, வயிற்று வலி போன்றன இந்த பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்) அதிகரிப்பால் வருகிறது என கூறப்படுகிறது.
கர்ப்பப்பையில் இந்த பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் காரணமாக குழந்தை தங்குவதிலும் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர். காஃபியில் உள்ள காஃ பின் ஹார்மோன்களை பாதிப்படையச் செய்யும் எனவும் அது , ஒழுங்கற்ற மாதவிடாய், அதிகப்படியான முடி, முகப்பரு மற்றும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காஃபியில் உள்ள காஃபின் உடலில் இன்சுலின் உற்பத்தியை குறைக்கிறது எனவும் ,அது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவினை அதிகரித்து நீரிழிவு நோய்க்கு வித்திடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. காபியை அதிக அளவு அருந்துவதால் உடலில் நரம்பு மண்டலம் மற்றும் வளர்ச்சிதை மாற்றம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
ஆகவே கர்ப்பிணி பெண்கள், கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்கள் ஒரு நாளைக்கு 200 மில்லி கிராமுக்கு குறைவான அளவு காஃபியை எடுத்துக் கொள்ளலாம் என ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு மற்றும் WHO இன் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருந்த போதும் இந்த காபி எல்லோரது உடல் நிலைக்கும் ஏற்றவாறு இருக்காது. உடலில் அதிகப்படியான வெப்பநிலையை கொண்டவர்கள் இந்த காபியை முற்றிலும் தவிர்ப்பது சிறந்தது.
PCOS இருந்தால் தவிர்க்க வேண்டிய உணவு :
பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
வெள்ளை மைதா மாவு, சர்க்கரை, ரொட்டி மற்றும் பாஸ்தா, பர்கர் சாண்ட்விச் போன்ற பதப்படுத்தப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதற்கு பதிலாக பருப்பு மற்றும் தானிய வகைகளை எடுத்துக் கொள்ளலாம் என கூறப்படுகிறது. ஓட்ஸ், பழுப்பு அரிசி, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, திணை, பச்சைப்பயிறு ,கொண்டை கடலை, காய்கறிகள் மற்றும் குயினோவா போன்ற இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்ள வலியுறுத்தப்படுகிறது.
மது:
பிசிஓஎஸ் இருந்தால் மதுவை முற்றிலுமாக தவிர்க்குமாறு மருத்துவர்கள் கூறுகின்றனர். மதுவை உட்கொள்வது டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களின் அளவை அதிகரிக்கும் என்ன சொல்லப்படுகிறது.
சர்க்கரை கலந்த பானங்கள்:
சோடா, ஃபிஸி,பலூடா, எனர்ஜி ட்ரிங்க் போன்ற பானங்கள் அதிக சர்க்கரை அளவைக் கொண்டுள்ளதால் அவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சர்க்கரை நிறைந்த குளிர் பானங்கள் இன்சுலின் சுரப்பை அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. மற்றும் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை பாதித்து வீக்கம் மற்றும் எடை அதிகரிப்புக்கும் வழிவகுக்கிறது.
வறுத்த உணவுகள்:
வறுத்த, எண்ணெயில் சமைத்த துரித உணவுகளை தவிர்க்குமாறு வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறு ஆரோக்கியமற்ற கொழுப்பு உணவுகளை சாப்பிடுவது
இதய நோய், நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
ஆகவே இளம் வயது பெண்கள் அதிக அளவு காஃபி அருந்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்