ஆரோக்கியமான உடலைப் பெறுவது என்பது பலரின் கனவு. ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்வதற்கும், விரும்பிய உடலை அடைவதற்கும் நமது உணவு முறையை நாம் தொடர்ந்து மாற்றி வருகிறோம்.


உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பதற்கு ஆரோக்கியமான உணவை உண்பது மிக முக்கியமான செயல். அந்த வகையில் எடை இழப்பு செயல்முறையை விரைவுபடுத்த, காய்கறிகளை, குறிப்பாக வெங்காயத்தை அதிகமாக சாப்பிட வேண்டும் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 


நாம் பல ஆண்டுகளாக வெங்காயத்தை சாப்பிட்டு வந்தாலும், அதன் நன்மைகளில் கவனம் செலுத்துவதில்லை. வெங்காயத்தை உட்கொள்வதால் ஏற்படும் பல நன்மைகளில் ஒன்று, அது உடலில் உள்ள கொழுப்பை வெளியேற்ற உதவும்.


சிவப்பு வெங்காயத்தில் க்வெர்செடின் ஏராளமாக உள்ளது. குறைந்த கலோரிகள், கரையக்கூடிய நார்ச்சத்துகளின் சிறந்த மூலமாகும்.


எடையைக் குறைக்கவும் உங்கள் கனவு உடலைப் பெறவும் வெங்காயத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைக் கீழே காண்போம்: 


வெங்காய சூப்:


தினசரி கலோரி எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால், வெங்காய சூப்கள் மக்கள் விரைவாக உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன. மேலும் சூப் பொதுவாக பதப்படுத்தப்பட்ட தயாரிக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளும் மக்களுக்கு அதிக தாதுக்களை வழங்குகிறது.


வெங்காய சாறு:


வெங்காயத்தில் கொழுப்பு குறைவாக உள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. எடை இழப்பை ஊக்குவிக்கிறது. இந்த தேன் மற்றும் வெங்காய பானத்தை வெறும் வயிற்றில் உட்கொள்வது உடலில் சேரும் கூடுதல் கொழுப்பை வெளியேற்ற உதவுகிறது.


கேரமல் செய்யப்பட்ட வெங்காயம் மற்றும் ரெட் சார்ட் சாலட்:


உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கும்போது சாப்பிட வேண்டிய சிறந்த உணவுகளில் ஒன்று சாலட். சுவையாக இருப்பதுடன், கேரமல் செய்யப்பட்ட வெங்காயம் மற்றும் ரெட் சார்ட் சாலட் ஆகியவை செரிமானத்தை மேம்படுத்துகின்றன.




மேலும் படிக்க: நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா காந்தி குடும்பத்துக்கு துணை நிற்காவிட்டால் உணவில் புழு பிடிக்கும்... கர்நாடகா எம்எல்ஏ கணேஷ்குமார் பேச்சு!


National Herald Case : நேஷனல் ஹெரால்டு விசாரணை...ராகுல், பிரியங்காவுடன் சென்ற சோனியா காந்தி...தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.