நீரிழிவு நோயாளிகளுக்கு அவர்களது நிர்வகிக்கப்படாத இரத்த சர்க்கரை அளவுகள் அவர்களுக்கு உடல்ரீதியாகப் பேரழிவை ஏற்படுத்தும் மற்றும் நீரிழிவு நோய் உங்கள் அனைத்து உறுப்புகளையும் அமைதியாக இருந்து பாதிக்கும். மிகவும் பலவீனமடையச் செய்து, உயிருக்கு ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும். இருப்பினும், உங்கள் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது, இந்த அபாயங்களில் பலவற்றை ஈடுசெய்து, ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுளைப்பெற உதவும்.


சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்:


நீரிழிவு மருந்துகளைத் தவிர, உங்கள் வாழ்க்கை முறையை சிறிது மாற்றியமைத்து ஆரோக்கியமான திசையில் வழிநடத்துவது உங்கள் சர்க்கரை அளவை திறம்பட நிர்வகிக்க உதவும். ஒருவர் கவனமில்லாமல் சாப்பிடும் ஆரோக்கியமற்ற தின்பண்டங்களைத் தவிர்க்க வேண்டும், உடல் உழைப்பு இல்லாமல் உட்கார்ந்த நிலையிலான வாழ்க்கை முறையைத் தவிர்க்க வேண்டும். இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவது மற்றும் சரியான நேரத்தில் படுக்கைக்குச் செல்வது ஆகியவை உங்கள் குளுக்கோஸ் அளவினைக் கட்டுக்குள் வைத்திருக்கச் செய்யும் காரணிகளில் ஒன்றாகும்


இதுதவிர உணவு ரீதியான பழக்க வழக்கங்கள் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உதாரணத்துக்கு காய்கறிகளை தேர்ந்தெடுத்து சரியான பதத்தில் சமைத்து உண்பது நீரிழிவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். 


சுரைக்காய்:


நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்றாக சுரைக்காய் கருதப்படுகிறது. இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த சிறந்ததாக அமைகிறது. சுரைக்காயில் உள்ள அதிக நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து உடலை நீரேற்றமாக வைத்திருக்கிறது மேலும் பசியைத் தூண்டாமல் பார்த்துக்கொள்கிறது.


சுரை குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது, அதாவது நமது இரத்த சர்க்கரை அளவுகளில் அதன் விளைவு மிகவும் மெதுவாக இருக்கும். நிபுணர்களின் கூற்றுப்படி, உணவின் அதிக கிளைசெமிக் குறியீடு, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.




சுரை நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதா?


சுரையில் உள்ள அதிக நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து காரணமாக நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. பலர் தங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த சுரைக்காய் சாறு குடிக்கிறார்கள்.


வேறு எப்படிச் சமைக்கலாம்?


முதலில் கொதிக்கும் நீரில் சுரைக்காயை கழுவ வேண்டும். விதைகளை உரித்து அதனைக் கிடைமட்டமாகப் பிரிக்கவும். ஒரு கிண்ணத்தில், எலுமிச்சை சாறு, சிவப்பு மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து பிசிறலாகத் தயார் செய்யவும். இதை சுரை மீது ஊற்றி ஒரு மணி நேரம் வைக்கவும்.


இப்போது ஒரு கடாயில் சிறிது எண்ணெயை சூடாக்கவும். சீரகம், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி விழுது, பனீர், பூண்டு, உப்பு, மிளகு மற்றும் புதிய கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். சுமார் 4-5 நிமிடங்கள் கிளறி வதக்கவும். இந்த வதக்கலை சுரைக்காயில் அடைத்து அதனை  மைக்ரோவேவில் 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 15-20 நிமிடங்களுக்கு வேகவைக்கவும். சமைத்ததும் எடுத்து சுவையான புதினா சட்னியுடன் பரிமாறவும். சுவையான ஸ்டஃப்ட் சுரைக்காய் தயார்.