மாலை நேரத்தில் வித்தியாசமான ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்பினால் இந்த மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு வெஜ்ஜி டோஸ்ட் ட்ரை பன்னலாம். இந்த ரெசிபியை மிக எளிமையாக செய்து விட முடியும். உருளைக்கிழங்கு மசாலாக்கலுடன் சேர்ந்து, இந்த சுவை மிகவும் நன்றாக இருக்கும். குழந்தைகள் இந்த ரெசிபியை விரும்பி சாப்பிடுவர். வாங்க மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு டோஸ்ட் எப்படி செய்வது என்று பார்க்கலாம். 


தேவையான பொருட்கள்


2  உருளைக்கிழங்கு பெரியது, 1  நறுக்கிய மிளகாய், 1 தக்காளி ஃப்ரெஷாக நறுக்கியது, 1 இஞ்சி நறுக்கியது,  மஞ்சள் தூள், 2-3 சொட்டு எலுமிச்சை சாறு, பச்சை கொத்தமல்லி, சீரகப் பொடி, கருமிளகு, உப்பு, சமையலுக்கு தேவையான நெய்


செய்முறை


1.ஒரு பெரிய உருளைக்கிழங்கைக் கழுவி, தோலுரித்து, செங்குத்து பக்கத்திலிருந்து தடிமனான துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

2.சமையல் பாத்திரத்தை எடுத்து, நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் மீதமுள்ள உருளைக்கிழங்கை வேகவைக்க வேண்டும்.

 

3.கொதித்ததும், மிதமான சூடான தவாவை எடுத்து, நெய் தடவி, வெட்டப்பட்ட உருளைக்கிழங்கை மேலோட்டமாக வறுக்கவும். ஒரு பக்கம் பொன்னிறமாக மாறியதும் புரட்டிப்போட்டு வறுக்க வேண்டும். மீதமுள்ள உருளைக்கிழங்குகளையும் இதே முறையில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

 


4.மற்றொரு பெரிய கிண்ணத்தில், வேகவைத்த மீதமுள்ள உருளைக்கிழங்கை  எடுத்து வைத்து மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். இப்போது நறுக்கிய கொத்தமல்லி, தக்காளி, பச்சை மிளகாய்,  இஞ்சி விழுது ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் மஞ்சள் தூள், சீரக தூள் மற்றும் ஃப்ரெஷ் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். தேவைக்கேற்ப மசாலாப் பொருட்களை கலக்க வேண்டும்.

 

 5. ப்ரெட்டின் ஒரு பக்கத்தில் இந்த கலவையை வைத்து துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கை இதன் மீது பரப்ப வேண்டும். 

 

6.கடாயில் நெய் தெளித்து தோசைக்கல்லில் அந்த ப்ரெட் துண்டை வைத்து 2-3 நிமிடம் குறைந்த தீயில் வைத்து கிளறி விட்டால் க்ரன்சி ஆலூ வெஜ்ஜி டோஸ்ட் ரெசிபி பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் இருக்கும்.
 

7. இதை தோசைக்கல்லில் இருந்து எடுத்து உங்களுக்கு பிடித்த சட்னி அல்லது சாஸுடன் பரிமாறவும்.

 

மேலும் படிக்க