டோனட் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. ஹெல்தியாக ஆப்பிளில் டோனட் செய்ய முடியும் என்பது டோனட் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும். ஆப்பிளும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் மிகுந்த பழமாகும்.


ஆப்பிள் டோனட்


என்னென்ன தேவை?


ஆப்பிள் - இரண்டு பழம்


Peanut Butter - தேவையான அளவு


துருவிய பாதாம் - ஒரு கப்


துருவிய பிஸ்தா - ஒரு கப்


துருவிய பேரீட்ச்சை - ஒரு கப்


துருவிய உலர் திராட்ச்சை, பெர்ரி- ஒரு கப்


செய்முறை:


ஆப்பிளை டோனட் போல வட்ட வடிவில் வெட்டவும். ஆப்பிள் நடுவில் சின்ன வட்டமாக நறுக்க சிறிய அளவிலான மூடியை பயன்படுத்தலாம். (குட்டி பூரி செய்யும் செய்முறை) இரண்டு ஆப்பிள்களை வட்ட வடியில் வெட்டி முடித்தவுடன் அதன் மீது Peanut Butter தடவி அதோடு துருவிய பாதாம், பிஸ்தா,பேரீட்ச்சை ஆகியவற்றை தூவிவிட்டால் ஆப்பிள் டோனட் ரெடி.


 


ஆப்பிள் ரப்டி (Apple Rabdi)



என்னென்ன தேவை?


ஆப்பிள் - 1 


பால் - ஒரு லிட்டர்


சர்க்கரை - ஒரு கப்


ஏலக்காய் தூள் - ஒரு ஸ்பூன்


குங்கும பூ - ஒரு ஸ்பூன்


செய்முறை


ஆப்பிளை தோல் சீவி துருவிகொள்ளவும். பாலை நன்றாக சுண்டும் அளவுக்கு காய்ச்சி எடுக்கவும். அடுப்பில் மிதமான தீயில் ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி துருவிய ஆப்பிளை சேர்த்து நன்றாக வதக்கவும். 5 நிமிடம் கழித்து நல்ல காய்ச்சிய பாலை, க்ரீம் பதத்தில் இருக்கும் பாலை அதில் சேர்த்து கிளறவும். இதோடு ஏலக்காய் தூள், குங்கும பூ எல்லாம் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். இதில் துருவிய நட்ஸ் சேர்க்கலாம். அவ்ளோதான் ஆப்பிள் ரப்டி ரெடி. சூடாகவோ ஃப்ரிட்ஜில் வைத்தோ சாப்பிடலாம்.


ஆப்பிள் பனீர் கீர்


ஆப்பிள்- ஒன்று, 


காய்ச்சி ஆற வைத்த பால் - 1/4  லிட்டர், 


சர்க்கரை – கால் கப், 


துருவிய பனீர் - சிறிதளவு 


நெய் – சிறிதளவு


முந்திரி -5


 திராட்சை - 5


குங்கும பூ - ஒரு சிட்டிகை


செய்முறை


நெய்யில் முந்திரி, திராட்சை, பாதம் வறுத்துக் கொள்ளவும். ஆப்பிளை தோல் நீக்கி துருவி நெய்யில் சிறிது நேரம் வதக்கி கொள்ளவும். பனீரையும் துருவி வேண்டும். பால் நன்றாக க்ரீம் பதத்திற்கு இருக்க வேண்டும். கண்டன்ஸ் மில்க் கூட பயன்படுத்தி கொள்ளலாம். துருவிய ஆப்பிள் நன்றாக வெந்ததும் பனீர் சேர்க்கவும். அதில் பால் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.   இதனுடன் சர்க்கரை, அரைத்த ஆப்பிள் விழுது, ஏலக்காய்த்தூள், குங்கும பூ சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்கவும் . துருவிய நட்ஸ் சேர்க்கலாம். ஆப்பிள் பனீர் கீர் ரெடி.


ஆப்பிள் தோல் - சரும பராமரிப்பு


சரும வறட்சி - சிலர்க்கு தோல் என்ன செய்தலும், வறட்சி மாறாமல் இருக்கும். இதற்கு முக்கிய காரணம் போதுமான நீர் சத்து கிடைக்காமல் இருப்பது. இது போன்ற சரும வறட்சி பிரச்சனைக்கு, இந்த ஆப்பிள் தோல் மிகவும் உதவியாக இருக்கும்.


ஒரு டீஸ்பூன் ஆப்பிள் தோல், மற்றும் 2 டீஸ்பூன் பால் மற்றும் தேன் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும். இதை முகம், கழுத்து பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைத்து விட்டு அதன் பிறகு கழுவி விடலாம். இதை செய்வதன் மூலம் தோல் வறட்சி மாறும். வாரத்திற்கு 2- 3 முறை இதை செய்யவும். இதை செய்வதன் மூலம், சருமத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும்.


தினமும் ஒரு ஆப்பிள் தோல் நீக்கி விட்டு சாப்பிட்டுவிட்டு அதன் தோலை கொண்டு சரும ஆரோக்கியத்தை கவனியுங்கள்.