தேவையான பொருட்கள் 


கோதுமை மாவு - 2 கப்


சர்க்கரை - 1 கப்


ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்


ரவை - அரை கப் 


எள் - கால் கப்


துருவிய தேங்காய் - கால் கப்


நெய் - கால் கப் 


எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை


ஒரு பாத்திரத்தில் 2 கப் கோதுமை மாவு, அரை கப் ரவை, கால் கப் எள், கால் கப் துருவிய தேங்காய், கால் கப் நெய் சேர்க்கவும். இவை அனைத்தையும் நன்றாக பிசைந்து தனியே வைத்து விட வேண்டும்


இப்போது அடுப்பில் ஒரு பேன் வைத்து அதில் ஒரு கப் சர்க்கரை கால் கப் தண்ணீர் சேர்க்கவும். ஒரு டீஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கரண்டியால் கிளறி விட வேண்டும். கரந்ததும் இந்த கரைசலை பிசைந்து வைத்துள்ள மாவில் சேர்த்து கரண்டியால் நன்கு மாவை கிளறி விட வேண்டும். பின் கையை வைத்து நன்கு சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ள வேண்டும். இதை மூன்று உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும். 


ஒவ்வொரு உருண்டையையும் கால் முழம் நீள உருளையாக உருட்டி இதை கத்தியால் மீடியம் சைஸ் ஸ்லைஸ்களாக வெட்டிக் கொள்ள வேண்டும். ஒரு உருளையில் 10 முதல் 12 ஸ்லைஸ்கள் வெட்டலாம். இதே போன்று மற்ற இரண்டு உருண்டைகளையும் உருளைகளாக உருட்டி ஸ்லைஸ்களாக வெட்டிக் கொள்ள வேண்டும். 


ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் வெட்டி வைத்துள்ள ஸ்லைஸ்களை எண்ணெயில் சேர்த்து பொரித்துக் கொள்ள வேண்டும். நன்கு பொன்னிறமாக வெந்ததும் இதை அடுப்பில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். 


இந்த இனிப்பு சாப்பிட மொறு மொறுவென இருக்கும். இது பார்ப்பதற்கு ரஸ்க் போன்று இருக்கும். இதை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்து ஒரு வாரம் வரையில் வைத்து சாப்பிடலாம். 


மேலும் படிக்க 


ஆரோக்கியமான சிறுதானிய தோசை - இப்படி செய்து அசத்துங்க!


Onion Coconut Milk Gravy :சப்பாத்திக்கு புதுவித சைட்டிஷ் ரெசிபி.. வெங்காய தேங்காய் பால் கிரேவி செய்முறை இதோ!