4 கப் கேக் வடிவத்தில் இருக்கும் கிண்ணம் அல்லது வட்ட வடிவில் உள்ள சுமார் 150 மிலி அளவு கொண்டு கிண்ணங்களை எடுத்துக் கொள்ளவும். இப்போது இந்த கிண்ணங்களின் உட்பகுதியில் எண்ணெய் தடவி இதனுள் கேழ்வரகு மாவை பரவலாக தூவி விட்டுக் கொள்ள வேண்டும். 


அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு கப் வெல்லம், இரண்டு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து வெல்லம் உருகும் வரை கரண்டியால் கிளறி விட வேண்டும். உருகியதும், இந்த வெல்ல கரைசலை ஸீடில் வடிகட்டிக் கொண்டு வடிகட்டிக் கொள்ள வேண்டும்.


இந்த கரைசலுடன் அரை கப் அளவு சன் ஃப்ளவர் எண்ணெய் சேர்க்க வேண்டும். அரை கப் ஃப்ரெஷ்ஷான கூலிங் இல்லாத தயிர் ஆகியவற்றை சேர்த்து பீட்டர் கொண்டு நன்கு கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும். 


இப்போது ஒரு கப் கேழ்வரகு மாவு, ஒரு கப் கோதுமை மாவு, 3 ஸ்பூன் கோக்கோ பவுடர்( கோக்கோ பவுடர் இல்லையென்றால் விட்டு விடலாம்) , ஒரு டீஸ்பூன் அப்ப சோடா, 2 சிட்டிகை உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து சல்லடையில் சலித்து விட்டு வெல்ல கரைசல் கலவையுடன் சேர்க்கவும். இதை பீட்டர் கொண்டு நன்றாக கலந்து விட்டு பின் இதனுடன் அரை கப் பால் சேர்த்து பீட்டரால் நன்றாக கலந்து விட வேண்டும். 


இப்போது இந்த மாவை கரண்டியால் அள்ளி ஊற்றினால் ரிப்பன் போன்று மடிப்பு மடிப்பாக ஊற்றும் இதுதான் சரியான பதம். தேவைப்பட்டால் மேலும் சிறிது பால் சேர்த்து மாவை கலந்து, ஒரு ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் அல்லது இரண்டு சிட்டிகை ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து விட்டுக் கொள்ளலாம். 


இப்போது நாம் எண்ணெய் தடவி மாவு தூவி வைத்துள்ள கிண்ணங்களை எடுத்து அதில் இந்த கலவையை பாதியளவு மட்டும் நிரப்ப வேண்டும். 


இப்போது அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதனுள் கம்பி ஸ்டாண்டு வைத்து அதன் மேல் ஒரு தட்டு வைத்து குக்கரை 5 நிமிடம் மூடி சூடுப்படுத்திக் கொள்ள வேண்டும். பின் ப்ரஷர் அடங்கியதும் மூடியை திறந்து உள்ளே வைத்துள்ள தட்டின் மீது நாம் கலவை நிரப்பி வைத்துள்ள கிண்ணங்களை அடுக்கி கொள்ள வேண்டும். குக்கரின் அளவுக்கு ஏற்ப நீங்கள் 4 அல்லது 5 கிண்ணங்களை வைத்து குக்கரை மூடி வைத்து மிதமான தீயில் 35 நிமிடம் வேக வைத்து, பின்னர் ப்ரஷ்ஷர் அடங்கியதும் மூடியை திறந்து கேக் கிண்ணங்களை எடுத்து ஆறியதும் கேக்கை எடுத்துக் கொள்ளலாம். இந்த கேக் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.