ஆரோக்கியமான சிறுதானிய தோசை - இப்படி செய்து அசத்துங்க!

ஆரோக்கியமான சிறுதானிய தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Continues below advertisement

காலை உணவு என்றாலே பெரும்பாலானோர் வீடுகளில் இட்லி, தோசை, உப்மா தான் பரிமாறப்படுகிறது. இந்த உணவுகளில் கார்போஹைட்ரைடு தான் நிறைந்துள்ளது. வழக்கமாக நாம் சாப்பிடும் தோசையை ஊட்டச்சத்து நிறைந்த தோசையாக தயாரிக்க முடியும். கோழ்வரகு மற்றும் பாசி பயறை கொண்டு எப்படி சுவையான தோசை செய்வது என்று தான் இப்போது நாம் பார்க்க போகின்றோம். 

Continues below advertisement

தேவையான பொருட்கள் 

பாசி பயறு - ஒரு கப் 

கேழ்வரகு - ஒரு கப் 

சீரகம் - அரை ஸ்பூன்

வெந்தயம் - அரை ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

காய்ந்த மிளகாய் - இரண்டு

தேங்காய் துருவல் - கால் கப் 

கறிவேப்பிலை - ஒரு கொத்து 

செய்முறை

ஒரு கப் கேழ்வரகு, ஒரு கப் பாசி பயறு, அரை ஸ்பூன் ஆகியவற்றை நன்கு கழுவி விட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனுடன் துருவிய கால் கப் தேங்காய், அரை ஸ்பூன் சீரகம், இரண்டு காய்ந்த மிளகாய், தேவையான அளவு உப்பு, ஒரு கொத்து கறிவேப்பிலை, ஒரு கப் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.  இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த மாவு தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். 

இப்போது இதை வழக்கம் போல் தோசையாக் ஊற்றி அதன் மீது சிறிது நெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். ஒரு நிமிடம் மூடி போட்டு வேக வைத்து மூடியை திறது வெந்து விட்டதா என்று பார்த்து தோசையை தோசை கல்லில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். இந்த தோசை, தேங்காய் சட்னி மற்றும் கார சட்னியுடன் வைத்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். 

மேலும் படிக்க 

Fruit Mixture: ஜில்லுனு ஆரோக்கியமான ஃப்ரூட் மிக்ஸர்! இப்படி செய்து கொடுத்து அசத்துங்க!

Summer Skin Care Tips: அடிக்கிற வெயிலில இருந்து சருமத்தை பாதுகாக்க இந்த டிப்ஸ பாலோ செய்து பாருங்க மக்களே!!

 

Continues below advertisement