தேவையான பொருட்கள்


பலாக்கொட்டை - கால் கிலோ 


வெங்காயம் - பெரிய சைஸ் 1 


தக்காளி - பெரிய சைஸ் 1 


பட்டை - சிறிய துண்டு 


கிராம்பு - 4


அன்னாசி பூ -1


குழம்பு மிளகாய் தூள் - இரண்டு ஸ்பூன்


கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு


எண்ணெய் - தேவையான அளவு 


உப்பு - தேவையான அளவு 


இஞ்சி -பூண்டு - ஒரு டேபிள் ஸ்பூன்


செய்முறை


அடுப்பில் கடாய் வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், ஒரு சிறிய துண்டு பட்டை, 4 கிராம்பு, ஒரு அன்னாசி பூ, அரை ஸ்பூன் சோம்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். பின் இதில் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய சைஸ் வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும். வெங்காயம் வதங்கி கண்ணாடிப்பதம் வந்ததும், ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், நறுக்கிய ஒரு பெரிய சைஸ் தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி குழைந்ததும் கால் கிலோ அளவு நறுக்கிய பலாக்கொட்டையை சேர்க்கவும். பலாக்கொட்டையை மூன்று அல்லது 4 துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். இப்போது இதை ஒரு நிமிடம் நன்றாக வதக்கி விட வேண்டும்.  இதில் இரண்டரை ஸ்பூன் அளவு வீட்டில் அரைத்த குழம்பு மிளகாய் தூளை சேர்க்கவும். குழம்பு மிளகாய் தூள் இல்லையென்றால் ஒரு ஸ்பூன் தனி மிளகாய் தூள், ஒன்றரை ஸ்பூன் தனியா தூள் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். மசாலாவின் பச்சை வாசம் போகும் வரை எண்ணெயிலேயே நன்றாக வதக்கி விட வேண்டும். பச்சை வாசம் போனதும் மீடியமான அளவு டம்ளரில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்க்க வேண்டும். இதனை மூடி போட்டு இடை, இடையே திறந்து கிளறி விட்டு வேக வைக்க வேண்டும். சுமார் 15 அல்லது 20 நிமிடங்களில் பலாக்கொட்டை நன்றாக வெந்து தண்ணீர் வற்றி விடும்.  இப்போது உப்பை சரி பார்த்து விட்டு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்தூவி கிளறி விட்டு இறக்கி கொள்ள வேண்டும். அவ்வளவு தான் சுவையான பலாக்கொட்டை வறுவல் தயார். இதை நீங்கள் சாதம், சப்பாத்தியுடன் வைத்து சாப்பிடலாம்.