கிறிஸ்துமஸ் என்றாலே கேக் தான் நினைவுக்கு வரும். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பலகாரம் , பிரியாணி உள்ளிட்டவை செய்தாலும் கேக் மட்டும் கொஞ்சம் ஸ்பெஷல். கேக்கில் ஸ்ட்ரா பெர்ரி, மேங்கோ, சாக்லேட், வெண்ணிலா என பல்வேறு வகைகள் உள்ளன.
இருந்தாலும் ப்ளம் கேக் கிறிஸ்துமஸ் சமயத்தில் அதிகமாக செய்யப்படுகிறது. இந்த ப்ளம் கேக்கை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். வாங்க ப்ளம் கேக் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
முட்டை - 3
மைதா -100 கிராம்
பட்டர் - 100 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
கார்ன் பிளார் - 2 ஸ்பூன்
ஓமம் தூள் - 1/2 ஸ்பூன்
திராட்சை - 30 கிராம்
சுக்குத் தூள் – 1/2 ஸ்பூன்
பால் - 1/4 கப்
முந்திரி,பிஸ்தா,வால்நட்- ஒரு கைப்பிடி அளவு
செர்ரி பழம் – 50 கிராம்
செய்முறை:
முதலில் முந்திரி, பிஸ்தா, வால்நட் ஆகியவற்றை நன்றாக பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரையையும் மிக்ஸியில் சேர்த்து பொடித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு சோள மாவை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதில் பால் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தினை அடுப்பில் வைத்து, அதில் அந்த கலவை நன்றாக கூழ் பதத்திற்கு வரும் வரை கிளற வேண்டும்.
மைதா மாவினை சலித்தும், பட்டரை உருக்கியும், செர்ரி பழத்தினை சிறு சிறு துண்டாக வெட்டியும் வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பொடித்த சர்க்கரை, பட்டர் சேர்த்து மிருதுவாக பிசைய வேண்டும். முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி நன்றாக பீட் செய்து, மைதா சேர்த்து பிசைந்த கலவையில் முட்டையை ஊற்றி நன்கு பிசைய வேண்டும்.
இந்த கலவையில் பால் சேர்த்து கலந்து, பின்பு கேக் டின்னில் பட்டர் பேப்பர் தடவி கலவையை பாதி வரும் வரை ஊற்ற வேண்டும்.
வெட்டி வைத்துள்ள செர்ரி பழங்களையும், பொடித்த நட்ஸ்களையும் இந்த கலவையின் மீது தூவி விட வேண்டும். ப்ரீ ஹீட் செய்து பின்பு ஓவனின் கேக் டின்னை வைத்து சுமார் 40 நிமிடத்திற்கு பின் எடுக்க வேண்டும்.
மேலும் படிக்க