குடை மிளகாயை வைத்து சப்பாத்தி மற்றும் நாண் ஆகியவற்றுடன் வைத்து சாப்பிட ஒரு சூப்பரான சைடிஷ் தயாரிக்கலாம். தற்போது நாம் குடைமிளகாய் ஜுன்கா ரெசிபி எப்படி செய்வது? என்று தான் பார்க்க போகின்றோம். 


தேவையான பொருட்கள் :


குடைமிளகாய் - 3.
பச்சை மிளகாய் - 3.
வெங்காயம் - 1.
பூண்டு விழுது - 1 ஸ்பூன்.
சீரகம் - 1 ஸ்பூன்.
கடுகு - 1 ஸ்பூன்.
மஞ்சள் - ½ ஸ்பூன்.
மிளகாய் பொடி - 1 ஸ்பூன்.
மல்லி பொடி - 1 ஸ்பூன்.
கடலை மாவு - 3 ஸ்பூன்.
எலுமிச்சை பழம் - 1.
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை


முதலில்  குடைமிளகாய், பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். 


பின்னர் எலுமிச்சை பழத்தை வெட்டி சாறு பிழிந்து 1 ஸ்பூன் அளவுக்கு தனியே எடுத்துக் கொள்ள வேண்டும்.


கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் இதில் சீரகம், கடுகு, பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.


அதில் பூண்டு விழுது, நறுக்கிய குடைமிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் பொடி, மல்லிப்பொடி, தேவையான உப்பு மற்றும் கடலை மாவு சேர்த்து குடை மிளகாய் வேகும் வரை நன்கு வதக்க வேண்டும். கடலை மாவு அடிபிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 


 குடை மிளகாய் நன்கு வதங்கியதும் எடுத்து வைத்துள்ள எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்கு கிளறி அடுப்பில் இருந்து இறக்கிவிட சுவையான குடைமிளகாய்  ஜுன்கா தயார்.


குடை மிளகாய் பயன்கள்


குடைமிளகாயில் லுடீன் மற்றும் ஜியாசாந்தைன் ஆகிய இரண்டு கரோட்டினாய்டுகள் நிறைந்துள்ளன. அவை விழித்திரையை பாதுகாக்கக்கூடியவை. கண்களின் பார்வைத்திறனையும் மேம்படுத்தும் தன்மை கொண்டவை.


குடைமிளகாயில் உள்ள சத்துக்கள் தலை முடியின் வேரை வலிமையாக்கி, தலை முடியை ஆரோக்கியமாக வைக்கிறது. மேலும் இது முடி உதிர்தலையும் தடுக்கிறது. முடி வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த குடைமிளகாய் பயன்படுவதாக சொல்லப்படுகிறது. 


மேலும் படிக்க 


TN Rain Alert: ஆபீஸ் முடிஞ்சு கிளம்புறீங்களா? 7 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - எந்தெந்த பகுதிகளில்?


CM Stalin On Governor: ”தமிழ்நாடு ஆளுநரின் செயலுக்கு இதுதான் என் ரியாக்‌ஷன்” - டெல்லியில் முதலமைச்சர் ஸ்டாலின் பளிச் பதில்


அயோத்தி கோயில் திறப்பு விழா! "நீங்க வந்துராதீங்க" அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு இந்த கதியா?