காலை சிற்றுண்டி என்பது நம் மூன்று வேளை உணவுகளில் முதன்மையானது மற்றும் முக்கியமானது. பொதுவாக பெரும்பாலானோரின் வீடுகளில் இட்லி, தோசை, உப்புமா போன்ற உணவுகளே காலை உணவாக தயாரிக்கப்படுகின்றன. இதனால் ஒரெ மாதிரியான காலை உணவை சாப்பிட சில நேரம் சலிப்பாக இருக்கும். அப்போது புதுமாதிரியான ஏதேனும் உணவிருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும்.


அப்படி இட்லி, தோசைக்கு மாற்றாக ஒரு காலை உணவை சாப்பிட விரும்புபவர்கள் செட்டிநாடு கார பணியாரத்தை முயற்சிக்கலாம். நிச்சயம் இது உங்களுக்கு பிடித்தமான ஒரு நல்ல சாய்சாக இருக்கும். பொதுவாக பணியாரம் என்பது உளுத்தம் பருப்பு மற்றும் அரிசி மாவு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த செட்டிநாடு கார பணியாரத்தில் வெந்தயமும் சேர்க்கப்படுகிறது. இந்த பணியாரம் மிருதுவாக இருக்கும். இதை சட்னி போன்ற சைடிஷ்களுடன் வைத்து சாப்பிடும் போது நல்ல சுவையாக இருக்கும். 


தேவையான பொருட்கள்


1 கப் அரிசி, 1/4 கப் உளுத்தம் பருப்பு, 1/4 தேக்கரண்டி வெந்தயம், 1/2 தேக்கரண்டி கடுகு ,10 கறிவேப்பிலை இலைகள்,  உப்பு -சுவைக்கேற்ப, 1 டீஸ்பூன் எண்ணெய், 1 மீடியம் சைஸ் வெங்காயம்- நறுக்கியது. 2 பச்சை மிளகாய், 1 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள். 


செய்முறை


1.உளுத்தம் பருப்பு மற்றும் அரிசி சேர்த்து ஊறவைத்து அரைத்த மாவை தனியாக வைக்கவும்.


2.கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் முதலில் கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், வெங்காயம், முழு சிவப்பு மிளகாய், தேங்காய் துருவல், கறிவேப்பிலை மற்றும் பச்சை கொத்தமல்லி சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.


3.சுவைக்கேற்ப உப்பு சேர்த்து  கலவையை நன்றாக கிளறி விட்டு பின் அடுப்பை அணைக்கவும். இந்த கலவையை மாவுடன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்ய வேண்டும்.


4.இப்போது ஒரு பணியாரம் கடாயை அடுப்பில் வைத்து சூடானதும்,பணியாரம் கடாயில் எண்ணெய் தடவ வேண்டும். இப்போது தயார் செய்த காரமான மாவை பணியாரம் அச்சுக்குள் ஊற்றி மூடியை மூடி வேக வைக்க வேண்டும்.


5.சிறிது நேரம் வெந்த பின் அவற்றைத் மறுபுறம் திருப்பி வேக வைக்க வேண்டும்.


6. இப்போது மிருதுவான செட்டிநாடு கார பணியாரம் தயார். நீங்கள் இந்த பணியாரத்தை சட்னி, சாம்பார், பச்சடி ஆகியவற்றுடன் வைத்து சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பணியாரத்தை விரும்பி சாப்பிடுவர். 


மேலும் படிக்க


World Cup 2023 Record: உலகக் கோப்பையில் இதுவரை உடைக்கப்பட்ட, படைக்கப்பட்ட சாதனைகள்.. லிஸ்ட் போயிட்டே இருக்கே!


Actor Vinayakan: ஜெயிலர் பட வில்லனை தட்டித்தூக்கிய காவல் துறை.. குடி போதையில் இப்படி பண்ணிட்டாரே!