மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிட நாம் அனைவருமே விரும்புவோம். அப்போது வழக்கமாக சாப்பிடும் பஜ்ஜி போண்டாவிற்கு பதிலாக  கட்லெட் போன்றவற்றை சாப்பிடலாம். கட்லெட்டை மிக எளிமையான முறையில் வீட்டிலேயே தயாரிக்கலாம். வாங்க கட்லெட் எப்படி செய்வதென்று பார்க்கலாம். 


தேவையான பொருட்கள்


காலி பிளவர் சிறியது, பொட்டுக்கடலை மாவு : 300 கிராம், சோம்பு 1/2 தேக்கரண்டி, பச்சைமிளகாய் 5, பட்டை 1 துண்டு, முந்திரிப் பருப்பு : 50 கிராம், கிராம்பு 4, நெய் 2 தேக்கரண்டி, ரொட்டித்தூள் 3 மேஜைக்கரண்டி, உப்பு- தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு.


செய்முறை


1. பச்சைமிளகாய், சோம்பு, பட்டை, கிராம்பு ஆகியவற்றை மிக்சியில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இத்துடன் காலி பிளவரைத் துண்டுகளாக்கிச் சேர்த்து, கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். 


2. முந்திரிப் பருப்பைப் பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.


3. பொட்டுக்கடலை மாவுடன், அரைத்த மசாலாக் காலி பிளவர் கலவை, வறுத்த முந்திரிப் பருப்பு, உப்பு இவற்றைச் சேர்த்துச் சிறிது தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.


4. கட்லெட் மாவை எலுமிச்சம் பழ அளவில் உருட்டி, பின் வட்ட வடிவில் தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். 


5. கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், வட்ட வடிவில் தட்டி வைத்துள்ள கட்லெட் துண்டுகளை எண்ண்ணெயில் சேர்த்து நன்கு வெந்ததும் எடுக்க வேண்டும். 


6. இவற்றை ஒரு தட்டில் பரப்பி,  இவற்றின் மேல் ரெட்டித் தூள்களைத் தூவினால், காலி பிளவர் கட்லெட் தயார். 


காலிபிளவர் நன்மைகள் 


நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலைத் தடுக்கிறது. காலிஃபிளவர் கருவின் மூளை மற்றும் முதுகுத் தண்டு வளர்ச்சிக்கு உதவுவதாகவும் கூறப்படுகிறது.  மூட்டு வலியைக் குறைப்பதில் காலிஃபிளவர் முக்கிய பங்கு வகிப்பதுடன், செரிமான கோளாறுகளை சரி செய்யும் என்றும் சொல்லப்படுகின்றது.  காலிஃபிளவரில் பீட்டா கரோட்டின், குர்செடின், சின்னமிக் அமிலம் மற்றும் பீட்டா கிரிப்டோக்சாந்தின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை இரத்தத்தில் உள்ள பிராண வாயுவை உறிஞ்சுவதை அதிகரித்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.


காலிஃபிளவர் வைட்டமின் சி மற்றும் மெக்னீசியத்தின் இரண்டு சக்திவாய்ந்த ஆதாரங்களைக் கொண்டுள்ளது. இவை இரண்டும் ஆரோக்கியத்திற்கு நல்லது. காலிபிளவர் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது, இது மன அழுத்தத்தை குறைக்கிறது.


மேலும் படிக்க


TN Governor RN Ravi: "காந்தி தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் சாதி தலைவராக மாற்றியிருப்பார்கள்" - ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சை பேச்சு


மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் விற்பனை - மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு