தோசைக்கு ஏதாவது புதிய சட்னி ட்ரை செய்ய விரும்புகிறவர்கள் கத்திரிக்காய் சட்னி ட்ரை பண்ணலாம். 


என்னென்ன தேவை


கத்திரிக்காய் - 100கி


எண்ணெய்- 4 டேபிள் ஸ்பூன்


பெரிய வெங்காயம் - 3


தக்காளி - 2


பூண்டு - 10 பல்


பச்சை மிளகாய் - 2


மிளகாய் தூள் - 1 ஸ்பூன்



தாளிக்க..


கடுகு 1 ஸ்பூன்


உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்


கருவேப்பிலை / கொத்தமல்லி - சிறிதளவு


உப்பு - தேவைக்கேற்ப



செய்முறை


கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கவும். இதோடு நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும். அதோடு, கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்க்கவும். எல்லாம் வதங்கியவுடன் ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். ரொம்ப நைஸாக அரைக்கக் கூடாது. 


சட்னியை பாத்திரத்திற்கு மாற்றி, கடுகு உளுந்துப் பருப்பு தாளித்தால் ருசியான சட்னி ரெடி.


வெள்ளை, பச்சை, ஊதா என பல நிறங்களில் கத்திரிக்காய் கிடைக்கிறது. கத்திரிக்காயில் மெக்னீசியம், மேங்கனீஸ், பொட்டாசியம் மற்றும் காப்பர் சத்துகள் நிறைந்துள்ளன. இது எலும்புகளை அடர்த்தியை மேம்படுத்தும்.


நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் ரச்ச சர்க்கரை அளவை சீரான நிலையில் வைத்திருக்க கத்திரிக்காயை சாப்பிடலாம். இது குடல் நலனுக்கு மிகவும் நல்லது. இது ஆன்டி-ஆக்சிடென்ட் சத்துகள் மிகுதியாக இருக்கிறது. 


நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து ஆகியவை இருப்பதால் செரிமான சக்தியை கத்திரிக்காய் மேம்படுத்துகிறது. உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும்.


என்னென்ன தேவை?


பீர்க்கங்காய் - 1


வெங்காயம் - 1 


புளி - லெமன் சைஸ்


காய்ந்த மிளகாய் - 6


உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்


தக்காளி - 1


உப்பு - தேவையான அளவு


எண்ணெய் - தேவையான அளவு


தாளிக்க


எண்ணெய் - தேவையான அளவு 


கடுகு - 1/4 ஸ்பூன்


உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்


பெருங்காயத்தூள்-1 சிட்டிகை


கறிவேப்பிலை - சிறதளவு


செய்முறை


 பீர்க்கங்காயை தோல் சீவி அதை நறுக்கி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பீர்க்கங்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.  ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து, சூடானதும், உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும். எல்லாம் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். பீர்க்கங்காய் சட்னி ரெடி. 


இதேபோல, முள்ளங்கி, பீட்ரூட் சட்னி செய்யலாம். 


மண் சட்டியில் மணக்க, மணக்க எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு  -ரெசிபி