எதாவது ஸ்பைஸியாக சாப்பிட வேண்டும்; அதுவும் குறைந்த நேரத்தில் ரெடி ஆகிடனும். இது சிறந்த சாய்ஸ் மேகி. கொரியன் ஸ்டைல் மேகி, சீஸ் இல்லாத மேகி, ஃபரைடு மேகி என பல வகைகள் வந்தாச்சு..


பூண்டு, எலுமிச்சை, கொத்தமல்லி சேர்த்து கொரியன் ஸ்டைலில் மேகி செய்து அசத்துங்க.


என்னென்ன தேவை?


எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்


பூண்டு - 2 டேபிள் ஸ்பூன்


பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2


மேகி மசாலா - 2 பாக்கெட்


வேகவைத்த மேகி - 2 பாக்கெட்


எலுமிச்சைச் சாறு - 2 டேபிள் ஸ்பூன்


செய்முறை


கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்  கூடானதும் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். அதோடு, மேகி மசாலா சேர்த்து வதங்கியதும் அதில் வேக வைத்த மேகியை சேர்க்கவும். அடுத்து, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி இதோடு சேர்க்கவும். நன்றாக கிளிறி, தேவையெனில் உப்பை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். மேகி, சூடாக இருக்கும்போது 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். புதுமையான ஸ்டைல் மேகி ரெடி. 


சீஸ் இல்லாமல் க்ரீமி மேகி


என்னென்ன தேவை


மேகி - 2 பாக்கெட்


பால் - ஒரு லிட்டர்


எண்ணெய் / நெய்/ வெண்ணெய் - தேவையான அளவு


செய்முறை


ஒரு லிட்டர் பாலை நன்றாக காய்ச்சி அரை அளவு வரும்படி காய்ச்சவும். அடுப்பில் மிதமான தீயில் கடாய் ஒன்றை வைத்து அதில் அரை லிட்டர் பால், மேகியை சேர்க்கவும். மேகி பாலில் நன்றாக வேகவிடவும். 5 நிமிடங்களில் மேகி வெந்து க்ரீமியாக கிடைக்கும். அப்போது இதில் மேகி மசாலாவை சேர்த்து கிளறி இறக்கினால் சீஸ் இல்லாத க்ரீமி மேகி ரெடி. நொடிகளில் சுவையான மில்க் மேகி எளிதாக செய்துவிடலாம். ட்ரை பண்ணி பாருங்க. 


மேகி ராமென்


என்னென்ன தேவை?


மேகி - 2 பாக்கெட்


துருவிய கேரட் - 1


பொடியாக நறுக்கிய காளான் - ஒரு கப்


பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டேபிள் ஸ்பூன்


பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்


சில்லி ஃப்ளேக்ஸ் ஆயில் - ஒரு டீஸ்பூன்


சோயா சாஸ் - ஒரு ஸ்பூன்


வேகவைத்த ஸ்வீட் கார்ன் - ஒரு கப்


வேகவைத்த முட்டை - 1


பெரியதாக நறுக்கிய பனீர், காளான் - ஒரு கப்


எண்ணெய் - தேவையான அளவு (சீஸ் பயன்படுத்தலாம்)


ஸ்பிரிங் ஆனியன் - சிறிதளவு


செய்முறை:


கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். அதோடு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மேகி நூடுல்ஸை பொட்டு வேக விடவும். அதோடு கொஞ்சம் Peanut Butter அல்லது அரைத்த வெள்ளை எள் விழுது, சோயா சாஸ் சேர்க்கவும். மேகி வெந்து கொஞ்சம் திக் கன்சிஸ்டன்ஸி வரும். இப்போது மேகியை அடுப்பிலிருந்து இறக்கவும். ஒரு பவுலில் கொஞ்சம் மேஜி சூப், மேகி சேர்த்து அதோடு சில்லி எண்ணெய் சேர்க்கவும். இப்போது, ஒரு கடாயில் கொஞ்சம் வெண்ணெய் சேர்த்து அதில் காளான், பனீர் (டோஃபு கூட பயன்படுத்தலாம்) சேர்த்து பொன்நிறமாக வரும் வரை வதிக்கி இறக்கவும். இந்த கலவையை மேஜியுடன் சேர்த்து அதில் துருவிய கேரட், வேகவைத்த ஸ்வீட் கார்ன், கொத்தமல்லி தழை, ஸ்பிரிங் ஆனியன், வேக வைத்த முட்டை சேர்த்தால் முடிந்தது. மேகி ராமேன் ரெடி.


அடிக்கடி மேகி சாப்பிடலாமா என்ற கேள்விக்கு ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்லும் பதில், ‘ குழந்தைகள் முதல் பெரியவர்கள் யாராக இருந்தாலும் அடிக்கடி மேகி சாப்பிட கூடாது.’ என்கின்றனர். கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் தயாரிக்கப்படும் மேகியாக இருந்தாலும் அடிக்கடி சாப்பிடுவது உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும். அடிக்கடி, மேகி சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் அதை தவிர்க்கலாமே!