உப்மா, கிச்சடி என்றாலே நம் எல்லோருக்கும் ஒரு வெறுப்பு வரும். ஆனால் கிச்சடியை மிகவும் சுவையாகவும், ஆரோக்யமானதாகவும் செய்ய முடியும். கொண்டைக்கடலை , உளுத்தம் பருப்பு மற்றும் பாசிப்பருப்பு ஆகியவற்றைக் கொண்டு பீர்பால் கிச்சடி எளிய முறையில் குறைந்த நேரத்தில் செய்ய முடியும். இந்த கிச்சடி சீரகம், பூண்டு, இஞ்சி மற்றும் புதினா மற்றும் மசாலா சேர்த்து செய்யப்படுவதால் இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும். இந்த கிச்சடியை ஒருமுறை சுவைத்தால் நிச்சயம் கிச்சடி உங்க ஃப்பேவரெட் லிஸ்ட்டில் சேர்ந்து விடும்.
தேவையான பொருட்கள்
500 கிராம் கோதுமை ரவை, 100 கிராம் சன்னா பருப்பு, 100 கிராம் உளுத்தம் பருப்பு கழுவியது, 200 கிராம் பாசி பருப்பு, 300 கிராம் வேகவைத்த அரிசி, 100 மில்லி நெய், 2 கிராம் சீரகம், 15 கிராம் நறுக்கிய பூண்டு, 8 கிராம் நறுக்கிய இஞ்சி, 70 கிராம் பீன்ஸ் நறுக்கியது, 70 கிராம் கேரட் நறுக்கியது, 40 கிராம் வறுத்த வெங்காயம், மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, ஒரு சிட்டிகை சிவப்பு மிளகாய் தூள், 15 கிராம் சோம்பு, 10 கிராம் கசூரி மேத்தி, 10 கிராம் புதிய புதினா இலைகள், உப்பு- சுவைக்கேற்ப.
செய்முறை
1.தோல் நீக்கிய உளுத்தம்பருப்பு, நிலவேம்பு மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றைக் கலந்து, நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இவை அனைத்தையும் புழுங்கல் அரிசி மற்றும் கோதுமை ரவை ஆகியவற்றுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும். அடிப்பிடிக்காமல் இருக்க தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
2.கிச்சடி கெட்டியாகத் தொடங்கும்.
3. கோதுமை ரவை, அரிசி, பருப்புகள் ஆகியவை வெந்து சரியான பதத்தில் மாறியவுடன் அடுப்பை அணைத்து விட்டு இந்த கலவையை மூடி போட்டு குளிர்ந்த இடத்தில் வைக்க வேண்டும்.
4.மற்றொரு கடாயில் நெய் மற்றும் சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும். இப்போது நறுக்கிய பூண்டு, இஞ்சி, பீன்ஸ் மற்றும் கேரட் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
5.கலவையை நன்றாக வதக்கி, ஃப்ரெஷ் புதினா இலைகள், வெங்காயம், மஞ்சள் மற்றும் சிவப்பு மிகளாய் தூள் சேர்த்து வதக்கிய பின் இதனுடன் கிச்சடியை சேர்க்க வேண்டும்.
6.எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து, ஒரு கெட்டிப் பதம் கிடைக்கும் வரை லேசான தீயில் வேக வைக்க வேண்டும்.
7.இறுதியாக உங்கள் சுவைக்கு ஏற்ப உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து, சற்று அதிகமான அளவில் நெய் சேர்த்து கிளற வேண்டும். இப்போது சுவையான பீர்பால் கிச்சடி தயாராகி விட்டது. கிச்சடியை சூடாக பரிமாறலாம்.
மேலும் படிக்க
Leo Success Meet: லியோ வெற்றி விழாவுக்கு காவல்துறை அனுமதி.. ஆனால் சில நிபந்தனைகள் இருக்கு..!
PM Modi Visit Gujarat: இரண்டு நாள் பயணமாக குஜராத் செல்லும் பிரதமர் மோடி.. பயணத்திட்டம் என்ன?