தேவையான பொருட்கள்


மாவுக்கு:


2 கப் மைதா, 1 தேக்கரண்டி உப்பு, 1-2 டீஸ்பூன் எண்ணெய், 1/4 கப் பால், தேவைக்கேற்ப தண்ணீர், 


திணிப்புக்கு:


250 கிராம் சிக்கன் கீமா (நறுக்கியது), 2 வெங்காயம் பொடியாக நறுக்கியது, 6.பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது, 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,1/2 கப் கொத்தமல்லி இலைகள்,1/2 கப் புதினா இலைகள்,1-2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள், 1 தேக்கரண்டி தானியா தூள், 1/2 தேக்கரண்டி சீரகத் தூள், 1 தேக்கரண்டி பெருஞ்சீரகத் தூள், 2 டீஸ்பூன் எண்ணெய், ருசிக்கேற்ப- உப்பு, 3-4 முட்டைகள், 1/4 தேக்கரண்டி ஜாதிக்காய் தூள், 5 சீஸ் துண்டுகள்,  (அல்லது தேவைக்கேற்ப).


செய்முறை


1.மைதா, உப்பு, எண்ணெய் மற்றும் பால் கலந்து மென்மையான பிசைந்து கொள்ளவும். பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைய வேண்டும். பிசைந்த மாவை சுமார் 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.


2.கோழிக்கறியை கழுவி, வடிகட்டி, அரை கப் தண்ணீருடன் சேர்த்து  குறைவான தீயில் வேகவைக்க வேண்டும்.  அவ்வப்போது கிளறி விட வேண்டும்.


3.ஒரு கடாயில், எண்ணெய்யை சூடாக்கி இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.


4. அடுத்து, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, அவை கண்ணாடிப்பதமாக மாறியதும், சமைத்து நறுக்கிய சிக்கனை சேர்க்கவும். இதை சுமார் 5 நிமிடங்கள் வதக்க வேண்டும்.


5. ஜாதிக்காய் தூள் தவிர மேலே குறிப்பிட்டுள்ள மசாலாக்கள் அனைத்தையும் சேர்த்து அதனுடன் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்க்கவும். சுமார் 2 நிமிடங்கள் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.


6. எலுமிச்சை சாறு, கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை சேர்க்கவும். கலந்து, கீமாவை மூடி 2 நிமிடம் வேக வைக்கவும். பின் கீமாவை ஆற வைக்க வேண்டும்.


7.முட்டையை சிறிது உப்பு மற்றும் ஜாதிக்காய் பொடியுடன் அடித்துக்( beat) கொள்ளவும்.


8. அடுத்து, பிசைந்து வைத்துள்ள மாவில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்து ரொட்டியைப் போல் உருட்டி எடுத்துக் கொள்ளவும். ஒவ்வொரு ரொட்டியின் மையத்திலும், ஒரு சீஸ் துண்டை வைத்து, அதன் மேல் 1 டீஸ்பூன் கீமா ஸ்டஃபிங் சேர்க்கவும்.


9.மேலும், பூரணத்தின் மேல் 1 டீஸ்பூன் அடித்த முட்டைகளைச் சேர்க்கவும். ரொட்டியின் விளிம்புகளை ஒன்றாக மூடி, உறை போன்ற வடிவத்தை உருவாக்க வேண்டும். முட்டை கலவையை சரியாக மூடுவதற்கும் பயன்படுத்தலாம்.


10.ஒரு தவாவில் எண்ணெய் அல்லது நெய்யை சூடாக்கி, அதன் மீது ரொட்டியை வைத்து, ஒரு ஸ்பேட்டூலால் லேசாக அழுத்தவும். 1 டீஸ்பூன் அடித்த முட்டைகளைச் சேர்த்து கவனமாகப் புரட்டி விட வேண்டும். மீண்டும், 1 டீஸ்பூன் முட்டை கலவையை இந்தப் பக்கத்தில் வைத்து மீண்டும் புரட்டி விட வேண்டும்.


இருபுறமும் பொன்னிறமாக மாறும் வரை புரட்டிப் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பைடா ரொட்டியை முக்கோண வடிவில் வெட்டி புதினா சட்னியுடன் சூடாக பரிமாறலாம்.