Badam Halwa: சுவையான பாதாம் அல்வா எப்படி ஈசியா செய்யுறது? இதோ டிப்ஸ்

சுவையான பாதாம் அல்வா எப்படி ஈசியா செய்யுறதுனு பார்க்கலாம் வாங்க.

Continues below advertisement

பாதம் பருப்பு சாப்பிடுவதால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இந்த பாதம் பருப்பை நீங்கள் அப்படியே சாப்பிடலாம் அல்லது ஊறவைத்தும் சாப்பிடலாம். ஆனால் பாதம் பருப்பை அப்படியே சாப்பிடுவதை விட ஊறவைத்து சாப்பிடுவது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் என்று கூறப்படுகிறது. பாதாம் பருப்பில் அதிக அளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன. இதை அதிகளவு உண்பவர்களுக்கு உடலிலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தரும் என கூறப்படுகிறது. 

Continues below advertisement

உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளும், நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகளையும் அதிகம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனை ஏற்படுகிறது. குறிப்பாக மைதாவில் செய்த உணவுகள் உடலுக்கு மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. பாதாம் பருப்புகளில் உணவை செரிக்கும் வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளன. அவற்றை அதிகம் உண்பவர்களுக்கு குடல் சார்ந்த அத்தனை குறைபாடுகளும் நீங்கும். எனவே மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் தினம் 5 - 8 ஊறவைத்த பாதம்களை சாப்பிடலாம் என கூறப்படுகிறது. 

தேவையான பொருட்கள் 

பாதாம்  - 1/2 கப் (இரவில் ஊற வைத்து, காலையில் அரைத்தது), சர்க்கரை - 1/2 கப், பால் - 1 கப், நெய் - 1/2 கப், குங்குமப்பூ - சிறிது (பாலில் ஊற வைத்தது)

செய்முறை

முதலில் ஒரு அகன்ற கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி பாத்திரம் முழுவதும் பரப்பிக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும். பின் அதில் சர்க்கரை சேர்த்து நன்கு கரைய விட வேண்டும்.

பிறகு அதில் பாதாம் பேஸ்ட் சேர்த்து, பால் மற்றும் குங்குமப்பூ சேர்த்து அடுப்பில் வைத்து, மிதமான தீயில் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

அப்படி கிளறி விடும் போது, கலவையானது சற்று கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் பாதி நெய் சேர்த்து 10 நிமிடம் குறைவான தீயில் வைத்து தொடர்ந்து கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இதனால் நெய்யை அல்வா முற்றிலும் உறிஞ்சிவிடும். அப்படி நெய்யானது முற்றிலும் வற்றியதும், கடாயை  இறக்கி, மீதமுள்ள நெய் சேர்த்து ஒருமுறை கிளறி குளிர வைத்தால், பாதாம் அல்வா ரெடி.
 
மேலும் படிக்க,
Continues below advertisement
Sponsored Links by Taboola