News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Milk : பால் குடிப்பது, எடை இழப்புக்கு தடையா? நிபுணர்கள் சொல்லும் விளக்கம் என்ன தெரியுமா?

பால் ஆரோக்கியமானது மற்றொரு பக்கம் அவை எடையைக் குறைப்பதில் பெரிய அளவில் பங்களிக்கிறது...

FOLLOW US: 
Share:

தங்கள் எடையை எப்போதும் கண்காணிப்பில் வைத்திருப்பவர்களுக்கு  அவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் பானங்கள் தொடர்பான பல சந்தேகங்கள் எப்போதும் இருக்கும். அவர்களின் எடையைக் குறைப்பதன் ஒரு பகுதியாக உணவில் தவிர்க்க வேண்டியவை சில உள்ளன.அவற்றில் பொதுவான ஒன்று பால் எனக் கூறப்படுகிறது. பால் ஆரோக்கியமானது, அதில் எந்த சந்தேகமும் இல்லை. நம்மில் பெரும்பாலோர் சிறுவயதில் இருந்தே பால் குடித்து வளர்க்கப்பட்டவர்கள் அல்லது அதில் சில மருத்துவப் பொருட்களைச் சேர்த்து கலந்து கொடுப்பார்கள். தினமும் காலையில் அந்த ஒரு கிளாஸ் பாலை குடிக்கும்படி உங்கள் பெற்றோர் உங்களை எப்போதும் வற்புறுத்த ஒரு காரணம் இருக்கிறது. பெப்டைட் ஒய்ஒய் எனப்படும் ஒரு ஹார்மோன், பசியை எதிர்த்துப் போராடும் திறனுக்காக நன்கு அறியப்பட்டது.அது பாலில் அதிகம் காணப்படுகிறது.

எடை குறைப்புக்கு பால் சிறந்ததுதான் என்பதற்கான காரணங்கள் இங்கே:

பாலில் பல்வேறு கூறுகள் உள்ளன, அளவாக எடுத்துக்கொண்டால் அவை எடை குறைப்புக்கு பங்களிக்கின்றன மற்றும் எடை அதிகரிப்பதை தடுக்கின்றன.

அளவாக எடுத்துக்கொண்டால், பாலில் உள்ள அதிகப் புரதச் சத்து, அதிக நேரம் உண்பதைத் தடுக்கும்.

அளவாக எடுத்துக்கொண்டால், பால் கால்சியத்தின் வளமான மூலமாகும் மற்றும் உணவில் அதிக அளவு கால்சியம் கொழுப்பு முறிவை ஊக்குவிக்கிறது மற்றும் உடலில் கொழுப்பு உறிஞ்சுதலைத் தடுக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. 

உணவுப் பொருட்களில் இருந்து வரும் கால்சியத்தை விட பால் பொருட்களிலிருந்து வரும் கால்சியம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று அது குறிப்பிடுகிறது.

பால் உண்மையில் புரதத்தின் சிறந்த மூலமாகும், இது உடலில் தசை சேர்மானத்தை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் அவசியமான மேக்ரோநியூட்ரியண்ட் ஆகும். தசையைக்  கட்டியெழுப்புவது மற்றும் பராமரிப்பது எடை குறைப்பின் ஒரு பகுதியாகும்; அவ்வாறு செய்வதன் மூலம், ஆரோக்கியமான சமநிலையில் உடலை வைத்து அதே நேரத்தில் கொழுப்பை வெளியேற்றி அவை தனி நபரை பலப்படுத்துகின்றன.

பால் வைட்டமின் பி 12, மெக்னீசியம் மற்றும் துத்தநாகத்தின் சிறந்த மூலமாகும், இவை அனைத்தும் புரதம் மற்றும் கால்சியத்துடன் கூடுதலாக எடை குறைப்புக்கு உதவி செய்பவை.

பாலில் கால்சியம் அதிகம் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது, இது இறுதியில் எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலுடன் காலை உணவுடன் சேர்த்து குடிக்கத் தொடங்கினால், அது புரதத்தைக் கொண்டிருப்பதால் தசையை வளர்ப்பதற்கு உதவுவது மட்டுமல்லாமல், அதிக ஆற்றலையும் நிரப்பி, நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஒரு சிறிய கிளாஸ் வெதுவெதுப்பான பால் குடிப்பது உங்களுக்கு நல்ல தூக்கத்தைத் தரும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

இது அனைவருக்குமான அறிவுரை அல்ல. உங்கள் வயதுக்கும், உடல் உபாதைகளுக்கும் ஏற்ப, மருத்துவர்களிடம் ஆலோசுத்த பின், ஒரு நாளைக்கு எவ்வளவு பால் அருந்தலாம் என்பதை ஆலோசனை பெற்ற பின் எடுத்துக்கொள்ளலாம்.

Published at : 30 Jan 2023 11:35 AM (IST) Tags: weight loss Milk Peptide

தொடர்புடைய செய்திகள்

125 கிடாய், 2600 கிலோ அரிசி:  ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட அசைவ விருந்து!

125 கிடாய், 2600 கிலோ அரிசி: ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட அசைவ விருந்து!

Corn and Curry Leaves Rice: ஊட்டச்சத்து மிகுந்த ஸ்வீட்கார்ன் - கருவேப்பிலை சாதம் -ரெசிபி இதோ!

Corn and Curry Leaves Rice: ஊட்டச்சத்து மிகுந்த ஸ்வீட்கார்ன் - கருவேப்பிலை சாதம் -ரெசிபி இதோ!

Spicy Paneer Curry: சுவையான பனீர் கிரேவி செய்வது எப்படி? ரெசிபி இதோ!

Spicy Paneer Curry: சுவையான பனீர் கிரேவி செய்வது எப்படி? ரெசிபி இதோ!

Paneer Broccoli Rice:ஆரோக்கியமான பனீர் ப்ரோக்கோலி ரைஸ் பவுல் - ரெசிபி இதோ!

Paneer Broccoli Rice:ஆரோக்கியமான பனீர் ப்ரோக்கோலி ரைஸ் பவுல் - ரெசிபி இதோ!

Sago Sarbath : ஜில்லுனு ஜவ்வரிசி சர்பத்.. கொளுத்தும் வெயிலுக்கு இதமான ரெசிப்பி இதோ..

Sago Sarbath : ஜில்லுனு ஜவ்வரிசி சர்பத்.. கொளுத்தும் வெயிலுக்கு இதமான ரெசிப்பி இதோ..

டாப் நியூஸ்

Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க

Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க

Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு

Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு

Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?

Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?