தேங்காய் கோதுமை மாவு மற்றும் நட்ஸ் கொண்டு ஒரு சூப்பரான இனிப்பை தயார் செய்யலாம். இதை குறைந்த நேரத்தில் மிக எளிமையாக செய்து விட முடியும். இந்த இனிப்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர். 


ஒரு கப் அளவு கோதுமை மாவு, அதே கப்பில் கால் கப் அளவு ரவை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டையும் சேர்த்து, போலி மாவு பதத்தில் பிசைந்துக் கொள்ள வேண்டும். பிசைந்த மாவை அப்படியே வைத்து விட வேண்டும்.


இப்போது ஒரு பேனை(pan) ஐ அடுப்பில் வைக்க வேண்டும். அதில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து சூடானதும் அதில் பாதியாக உடைத்த முந்திரி, பாதாமை சேர்த்து, திராட்சையையும் சேர்க்க வேண்டும். பின் துருவிய அரை மூடி தேங்காய் மற்றும் பொடித்த வெல்லம், சிறிது ஏலக்காய்ப் பொடி சேர்த்து கிளற வேண்டும். இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலந்ததும், அடுப்பை அணைத்து விட வேண்டும். 


இப்போது வேறொறு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் முக்கால் கப் சர்க்கரை மற்றும் முக்கால் கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். இவை கொதித்து பிசு பிசுப்பு பதம் வந்ததும், ஏலக்காய் பொடி தூவி இறக்கி கொள்ள வேண்டும். 


இப்போது பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, சப்பாத்தி கட்டையின் மீது வைத்து அடை போன்று உள்ளங்கை அளவில் தட்டிக் கொள்ள வேண்டும். இதனுள் ஒரு ஸ்பூன் தேங்காய் ஸ்டஃப் வைத்து நான்காக மடித்து மூடிக்கொள்ள வேண்டும். லேசாக தட்டையாக அழுத்தி விட வேண்டும். 


இப்போது ஒரு பேனை ( pan) அடுப்பில் வைத்து அதில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் தயாரித்து வைத்துள்ளவற்றை எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுக்க வேண்டும். இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை திருப்பி போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் சுவையான தேங்காய் இனிப்பு தயார். 


மேலும் படிக்க 


Cauliflower Pepper Masala: காலிஃபிளவர் மிளகு மசாலா! இப்படி செஞ்சா சுவை அசத்தலா இருக்கும்!


Sweet Potato Halwa: நார்ச்சத்து மிக்க சர்க்கரை வள்ளிக்கிழங்கில் தித்திப்பான அல்வா செய்து அசத்துங்க!


Pumpkin Cutlet: பூசணிக்காயில் ஒருமுறை இப்படி கட்லெட் செய்து பாருங்க... சுவையில் அசந்து போய்டுவிங்க...