Cauliflower Pepper Masala: காலிஃபிளவர் மிளகு மசாலா! இப்படி செஞ்சா சுவை அசத்தலா இருக்கும்!

சுவையான காலிஃபிளவர் மிளகு மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Continues below advertisement

காலிஃபிளவரில், மஞ்சூரியன், ப்ரை, கிரேவி உள்ளிட்ட பல்வேறு வகையான ரெசிபிகளை செய்யலாம். காலிஃபிளவர் பல ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது. தற்போது நாம் காலிஃபிளவர் மிளகு மசாலா எப்படி செய்வது என்று தான் பார்க்க போகின்றோம். வாங்க சுவையான காலிஃபிளவர் மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம். இது சாதத்திற்கு சூப்பர் காம்பிசேஷனாக இருக்கும்.

Continues below advertisement

தேவையான பொருட்கள்

காலிஃபிளவர் – 1 மீடியம் சைஸ்

வெங்காயம் – 1

தக்காளி – 2

மஞ்சள் – 1/4 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

அரைக்க 

சிவப்பு மிளகாய் – 3

கருப்பு மிளகு – 3/4 தேக்கரண்டி

தனியா – 1 தேக்கரண்டி

பெருஞ்சீரகம்  – 1/2 தேக்கரண்டி

பூண்டு – 2 பல்

தாளிக்க

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

கடுகு – 1/2 தேக்கரண்டி

இலவங்கப்பட்டை – 1/2 அங்குல துண்டு

கிராம்பு – 2

பெருஞ்சீரகம் – 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை  – 1 கொத்து

செய்முறை 

காலிஃபிளவரை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். சுடு தண்ணீரில் உப்பு மற்றும் 1/8 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து அதில் நறுக்கிய காலிபிளவரை சேர்த்து 3 நிமிடங்களுக்குப் பின் எடுத்து தட்டில் வைத்துக் கொள்ளலாம். 

சிவப்பு மிளகாய் ,கருப்பு மிளகு ,தனியா ,பெருஞ்சீரகம் , பூண்டு பல் ஆகிவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு  அதனுடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து, கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடி கனமான கடாயை சூடாக்கி, எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு சேர்த்து பொரிந்ததும், இலவங்கப்பட்டை, கிராம்பு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். 

வெங்காயம் வதங்கியதும், பொடியாக நறுக்கிய தக்காளி, தேவையான அள்வு உப்பு, மீதமுள்ள மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.

சுடுதண்ணீரில் போட்டு எடுத்து வைத்துள்ள காலிஃபிளவர் இதனுடன் சேர்க்க வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் இதனுடன் சேர்த்து  கிளறி விட வேண்டும்.  சிறிய டம்ளரில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்க்க வேண்டும். 

தண்ணீர் வற்றும் வரை காலிஃபிளவர் வேக வைக்கவும்.  காலிபிளவரை மூடிப்போட்டு வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும். அடிப்பிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறி விட வேண்டும்.

தண்ணீர் வற்றியலும் சற்று ஈரம் இருக்கும் போது, மேலும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, காலிஃபிளவர் சற்று சுருங்கும் வரை வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் சுவையான மிளகு காலிஃப்ளவர் மசாலா தயார். 

மேலும் படிக்க 

Soya Chunks Gravy: சப்பாத்தி, சாதத்திற்கு ஏற்ற காம்போ! சோயா சங்க்ஸ் கிரேவி செய்வது எப்படி?

Crab Omlette :புரோட்டீன் நிறைந்த நண்டு ஆம்லேட்.... இப்படி செய்தால் சுவை சூப்பரா இருக்கும்...

Continues below advertisement
Sponsored Links by Taboola