ஏராளமானோர் பாஸ்ட் புட்டை விரும்பி உண்ணுகின்றனர். அப்படி சப்பிடும் போது அந்த உணவு மிகவும் பிடித்து விடுவதால் ஒரு சிலர் அந்த உணவு வகைகளை வீட்டிலேயே தயார் செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால் ஹோட்டலில் சாப்பிட்ட அதே சுவையில் பாஸ்ட் புட்டுகள் கிடைப்பதில்லை. இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். பல்வேறு வகையான பாஸ்ட் புட்கள் இருந்தாலும் சிக்கன் ப்ரைட் ரைஸ் ஏராளமானோரின் ஃப்பேவரெட்டாக உள்ளது. சிக்கன் ப்ரைட் ரைஸ்சின் சுவைதான் இதற்கு காரணம். முட்டையும், சிக்கனும் சேர்ந்து ஒரு உணர்வுப்பூர்வமான சுவையை கொடுக்கிறது. இதனால் தான் சிக்கன் ப்ரைட் ரைஸ் ஸ்பெஷலாக உள்ளது. இப்போ ஹோட்டல் ஸ்டைலில் சிக்கன் ப்ரைட் ரைஸ் எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க. 


தேவையான பொருட்கள்


பாசுமதி அரிசி – 1 கப், வெங்காயம் – 1 கப், எலும்பு இல்லாத கோழி - 1/2கப், குடைமிளகாய் – 2, கேரட் – 1, பீன்ஸ் – 15, வெங்காய தாள் – 1, இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜைகரண்டி, முட்டை -3, சில்லி சாஸ் – 1 மேஜைகரண்டி, சோயா சாஸ் – 1 மேசைக்கரண்டி,மிளகு தூள்-1 மேசைக்கரண்டி, நெய் – 1/4 கப், உப்பு – தேவையான அளவு.


செய்முறை


குடைமிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ், வெங்காயத்தாள், கேரட் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். பாசுமதி அரிசிரியில் சாதம் உதிர் உதிரக வடித்து ஆற வைத்து கொள்ளவும். அத்துடன் கோழி கறியை கழுவிச் சுத்தம் செய்து எடுத்துக் கொண்டு, உப்பு சேர்த்து தனியே வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 


ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும். அடுத்து அதில் சிறிது வெங்காயத்தாளையும் சேர்த்து வதக்கிக் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். அதன் பின் காய்கறிகளைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின் அதில் முட்டையை  உடைத்து ஊற்றி நன்றாக கிளற வேண்டும். 


இதனுடன் கோழிக்கறி துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அடுத்து அதில் உப்பு, சோயா சாஸ், சில்லி சாஸ், மிளகுதூள் சேர்த்து மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.  காய்கறி பாதி வெந்தவுடன் ஆற வைத்த சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி இறக்க வேண்டும்.  இப்போது சுவையான சிக்கன் ப்ரைடு ரைஸ் தயார். இதனுடன் டொமெட்டோ அல்லது சில்லி சாஸ் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். 


மேலும் படிக்க


Chandrayaan 3: தூக்கத்தில் இருந்து மீண்ட சந்திரயான் 3 லேண்டர் மற்றும் ரோவர்.. நாளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரும் இஸ்ரோ..


EPS Vs Udhayanidhi Stalin: இபிஎஸ்சை இழுக்காதீங்க! உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்..