தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை செயல்பாடுகளை உருவாக்கி லாபத்துடன் கூடிய உற்பத்தி, விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்தி, பொருளாதார ரீதியாக மேம்படுத்த பசுமை தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் 'பசுமை தொழில் முனைவு திட்டம்' உருவாக்கப்பட்டுள்ளது.


Asia Games 2023: ஆசிய போட்டி மகளிர் கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா...தங்கம் வெல்லுமா?



இத்திட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினரால் நடத்தப்படும் பசுமை நிறுவனங்கள் மட்டுமே தேர்வு செய்யப்படும். மகளிர் சுயஉதவிக்குழுவினரின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பசுமை நிறுவனங்களை முன்னெடுக்கும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் தொழில், தொழில் முனைவோர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் தொழில்முனைவோர் கண்காணிப்பு இணையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.


மேலும், விண்ணப்பிக்கும் நிறுவனம் தொடங்கி ஓராண்டுக்கு மேல் தொடர் செயல்பாட்டில் இருக்க வேண்டும். நிறுவனம் கட்டாயம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம் அங்கீகாரம் மற்றும் பதிவு பெற்றிருக்க வேண்டும். நிறுவனத்தின் ஆண்டு வருமானம் குறைந்தது ரூ.4 லட்சமாக இருக்க வேண்டும். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைக்கு உட்படுத்தப்பட்ட வெள்ளை, பச்சை மற்றும் ஆரஞ்சு தொழில் நிறுவனங்களால் ஏதேனும் ஒன்றில் தகுதி பெற்ற நிறுவனமாக இருத்தல் வேண்டும்.


Asian Games Medal Tally: ஆசிய விளையாட்டு போட்டி - குறிவைத்து அடிக்கும் இந்தியா - பதக்கப் பட்டியலில் முதலிடம் யாருக்கு?




விருப்பமுள்ளோர் வருகிற 30-ந்தேதிக்குள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பத்தினை பெற்று விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நிறுவனங்களுக்கு தலா ரூ.4 லட்சம் தொழிற்வளர்ச்சி நிதியாக வழங்கப்படும். கண்காணிப்பு மற்றும் பசுமைத்தணிக்கை மூலம் தேர்வு செய்யப்படும் நிறுவனங்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்படும். என தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா அறிக்கை வெளியிட்டுள்ளார்.


பள்ளத்தில் சரிந்த லாரி! சாலையில் சிதறிய பீர் பாட்டில்கள்! பதுக்கி வைத்த மதுப்பிரியர்கள்! நடந்தது என்ன?