பொதுவாக ஆண்கள் எந்தவித உள்ளாடை அணிவது என்பதில் அதிக கவனம் செலுத்த மாட்டார்கள். அப்படி இருப்பவராக நீங்கள் இருந்தால் இனிமேல் அதில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உண்டு. ஏனென்றால் எந்த உள்ளாடை பயன்படுத்துகிறீர்களோ அதனால் சில பயன் உள்ளன. அதிலும் குறிப்பாக சிறந்த செக்ஸ் லைஃப் அமைய எந்தவித உள்ளாடை பயன்படுத்த வேண்டும் என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். 


அந்த சந்தேகத்திற்கு ஆய்வுகள் மற்றும் வல்லுநர்கள் ஆகியோர்கள் கூறும் கருத்து என்ன?


பெரும்பாலான ஆண்கள் அணியும் உள்ளாடைகள் பாக்சர்ஸ் மற்றும் ப்ரீப்ஸ் முறையில் இருக்கும். அதில் பாக்சர்ஸ் என்பது நமது முன்னோர்கள் அணிந்து வந்த பட்டாபட்டி டிரையரின் தற்போதைய மார்டன் வடிவம் தான். இந்தச் சூழலில் இந்த இரண்டில் எது நம்முடைய உடலுக்கு நல்லது என்பது தொடர்பாக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் உள்ளாடை அணிவதும் அதனால் விந்து எண்ணிக்கையில் மாற்றம் எதுவும் உள்ளதா என்பது தொடர்பாக தரவுகள் சேகரிக்கப்பட்டன. இதற்காக சுமார் 650க்கும் மேற்பட்ட ஆண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுடைய ரத்த மாதிரி மற்றும் விந்தணுக்கள் பரிசோதனை ஆகியவை செய்யப்பட்டன. இந்த ஆய்வு ஜெர்னல் ஆஃப் ரிப்ரோடக்‌ஷன் என்ற ஜெர்னலில் வெளியானது. 




அந்த முடிவில் பாக்சர்ஸ் முறையில் உள்ளாடை அணிந்தவர்களின் விந்து எண்ணிக்கை மற்றும் தரம் ப்ரீஃப்ஸ் முறை உள்ளாடை அணிந்து இருந்தவர்களைவிட 25 சதவிகிதம் அதிகமாக இருந்தது. அத்துடன் பாக்சர்ஸ் அணிபவர்களின் விந்து திறன் 33 சதவிகிதம் அதிகமாக இருந்ததும் கண்டறியப்பட்டது. மேலும் தங்களுடைய உள்ளாடைகளை மிகவும் இருக்கமாக அணிந்து கொண்டிருந்த ஆண்களின் உடலில் விந்தணுக்களின் உற்பத்தி இயல்பைவிட சற்று குறைந்து இருப்பது கண்டறியப்பட்டது. அதாவது இருக்கமாக இருப்பதால் விந்தணுக்களின் சுரப்பு மிகவும் குறைந்து காணப்பட்டுள்ளது. 


ஏனென்றால் இருக்கமாக உள்ளாடை அணிவதால் விந்து பையின் வெப்பம் அதிகமாக இருக்கும். அப்படி அதிக வெப்பத்துடன் விந்து பை இருந்தால் விந்து உற்பத்தி மிகவும் குறையும். இதனால் தான் இருக்கமாக உள்ளாடை அணிபவர்களின் உடலில் அந்த விந்து உற்பத்தி குறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக மிகவும் இருக்கமாக ப்ரீஃப்ஸ் உள்ளாடை அணிந்தால் இந்த சிக்கல் ஏற்படும். 




ஆகவே உள்ளாடை அணிவதை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?


உடல் வெப்பத்தை எப்போதும் கட்டுக்குள் வைக்கும் உள்ளாடைகளை எப்போதும் தேர்வு செய்வது நல்லது. அத்துடன் உங்களுடைய விந்து பைகள் மிகவும் இருக்கமாக இல்லாத வகையில் உள்ளாடையை அணிய வேண்டும். பாக்சர் வகை உள்ளாடையில் இந்த சிக்கல் அதிகம் இருக்காது. எனவே ப்ரீஃப்ஸ் உள்ளாடைக்கு பதிலாக பாக்சர் உள்ளாடைக்கு மாறாலம். அப்படி இல்லையென்றாலும் ப்ரீஃப்ஸ் உள்ளாடையை மிகவும் இருக்கமாக அணியாமல் இருந்தாலே போதுமானது.


மேலும் படிக்க: கவனம்! கவனம்! இதெல்லாம் சாதாரணமில்ல.. உங்க முதுகு தண்ட பாதிக்கும்! இதப்படிங்க!