Just In





Vadivelu | உதயநிதி வாழ்த்து.. புதுப்படத்துல பாட்டு.. அப்டேட்டுகளை அள்ளி வீசிய வடிவேலு!
புதிய படத்தில் பாட இருக்கின்றேன் நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.

“எனக்கு போட்டி நான் தான்” என்று தனது பிறந்தநாளில் நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.
நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு இன்று தனது 61ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் உள்பட பலரும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர். வடிவேலுவின் மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் தெறிக்கவிட்டு நெட்டிசன்கள் வடிவேலுவை கொண்டாடி தீர்த்தனர். #HBDVadivelu என்ற ஹேஷ்டேக் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த நிலையில், தனது பிறந்தநாளில் செய்தியாளர்களுக்கு பேட்டிளித்த நடிகர் வடிவேலு, உலகம் முழுவதில் இருந்தும் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறினார்.
தொடர்ந்து அளித்த பேட்டியில், “எனக்கு போட்டி நான் தான். மீண்டும் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்ததற்கு உதயநிதி ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து கூறினார். புதிய படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். புதிய படத்தில் பாட இருக்கின்றேன்” என்றும் கூறினார். மேலும், புதிய படம் தொடர்பான பல தகவல்களை வடிவேலு பகிர்ந்து கொண்டார்.
முன்னதாக, நடிகர் வடிவேலு தனது பிறந்தநாளை இயக்குநர் சுராஜ் உடன் கேக் வெட்டி கொண்டாடினார். அது தொடர்பான புகைப்படம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கிக்கொண்டிருக்கிறது. அந்தப் புகைப்படத்தில் வடிவேலு தனக்கே உரிய பாணியில் சூப்பரான பாடி லாங்கவேஜ்ல் போஸ் கொடுத்துள்ளார்.
கடந்தாண்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக பல பிரச்னைகளால், சினிமாவில் சரியாக தோன்றாத இருந்த வடிவேலுவின் அனைத்து பிரச்னைகளும் சமீபத்தில் தீர்த்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மீண்டும் ‘நாய்சேகர்’ படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளார் வடிவேலு. இந்தப்படத்தை சுராஜ் இயக்குகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது.
புதிய திரைப்படத்தின் அறிமுக கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய வடிவேலு "மக்களை இன்னும் சிரிக்க வைத்து சந்தோசப்படுத்தி விட்டு தான் என் உயிர் போகும்; முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்த நாள் முதல் எல்லாம் பிரகாசமாகிவிட்டது" என்று கூறினார்.
Vadivelu Re-Entry: எகிறும் எதிர்பார்ப்பு.. ரீ எண்ட்ரியில் மாஸ் காட்டுவாரா வடிவேலு?
”வடிவேலு பிரச்சனையை தீர்த்தது முதல்வர் அல்ல.. நான்தான்” - சீமான்