முதுகு தண்டு ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் உடலில் பல்வேறு பிரச்னைகள் வருகிறது. முதுகு தண்டு ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் பல்வேறு நோய்கள் வருகிறது. முதுகு தண்டு ஆரோக்கியமாக வைத்து இருக்க எளிய 6 வழிமுறைகள்.
முதுகு சம்பத்தப்பட்ட பிரச்னைகள் உலகளவில் பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், உடல் உழைப்பு இல்லாமல் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, உடற்பயிற்சி இன்மை, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல்வேறு காரணங்களால் முதுகு தண்டு பாதிக்கப்படுகிறது. வருமுன் காப்பதே சிறந்தது. முதுகு சமந்தபட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்க செய்ய வேண்டிய சில வழிமுறைகள்
- உடற் பயிற்சி - உடற்பயிற்சி தினம் 30- 60 நிமிடங்கள் செய்வது முழு உடலையும் ஆரோக்கியமாக வைக்கும். நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்ளிங், யோகா போன்ற எளிமையான பயிற்சிகள் அனைவராலும் செய்ய முடியும். முதுகு தண்டு பலமாக இருப்பதற்கு உதவியாக இருக்கும். மேலும், ஜிம் உபகரணங்கள் வைத்து செய்யும் பயிற்சிகளும் முதுகு தண்டு பலமாக வைப்பதற்கு உதவும். தினம் உடற்பயிற்சி செய்வது அவசியம்.
2. சரியான போஸ்சர் - முதுகு தண்டு S வடிவத்தில் இருக்கும். அதை நேராக வைத்து இருக்க வேண்டும். நடக்கும் போதும், அமர்ந்து வேலை செய்யும் முதுகு சரியாக இருக்கிறதா என்பதை உறுதி படுத்தி கொள்ள வேண்டும். நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவராக இருந்தால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து நடந்து முதுகு தண்டை சரி படுத்தி கொள்ள வேண்டும். நீண்ட நேரம் அமர்ந்து இருந்தால் அது முதுகு வடிவம் மாறி அதுவே வலி வருவதற்கு காரணமாக அமையும்.
3.சரியான நிலையில் தூங்க வேண்டும். - தூங்கும் போது சரியாக நேராக முதுகு தண்டு தரையில் வைத்து படுத்து தூங்க வேண்டும். முதுகு தண்டில் இருக்கும் அழுத்தம் முழுவதும் ரிலாக்ஸாக இருக்கும். சரியான அளவில் தலையணை வைத்து இருக்க வேண்டும். அதிக உயரத்தில் தலையணை வைத்து தூங்குவது முதுகு தண்டை பாதிக்கும்.
4.அலாரம் வைத்து கொள்ளுங்கள் - வேலை நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு முறை எழுந்து லேசான பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் முதுகு மற்றும் கால் தசைகள் ஓய்வாக இருப்பதற்கு உதவியாக இருக்கும்.
5.எடை தூக்க கூடாது - உங்களுக்கு முடிந்த வரையில் மட்டும் எடை தூக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக , தூக்குவது, முதுகு தண்டை பாதிக்கும். எடை தூக்கும் போது முதுகு தண்டு எப்படி இருக்கிறது என்பதை உறுதி படுத்தி கொள்ள வேண்டும்.
6.வாழ்வியல் முறை - உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுன், போதுமான பயிற்சியுடனும், ஊட்டச்சத்து மிக்க உணவு என ஆரோக்கியமாக வாழ்வியல் முறை பின்பற்ற வேண்டும். இது மிகவும் அவசியம். சுறுசுறுப்பான வாழ்வியல் முறை பின்பற்றுவது அவசியம்.