இன்றைய காலகட்டத்தில்  ஆரோக்கியமாக இருக்க தினம் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வது அவசியம். எந்த  வயது வித்தியாசம் இன்றி குழந்தைகைகள் முதல் பெரியவர்கள் வயதானவர்கள் அனைவரும் உடல்பயிற்சி செய்வது அவசியம். எண்ணற்ற உடற்பயிற்சிகள் உள்ளன. எளிமையான நடைப்பயிற்சியில் தொடங்கி, தாய் சீ வகையிலான உலகில் ஒவ்வொரு இடங்களை  பொருத்தும், உடல்பயிற்சிகள் மாறுபடுகின்றன. எந்த காரணத்திற்காக மருத்துவரிடம் சென்றாலும் உடல் எடை குறையுங்கள் என ஆலோசனை வழங்குகிறார்கள். நாமும் தினம் படுக்கைக்கு செல்லும் முன், காலைல  சீக்கிரம் எந்திரிச்சி, வாக்கிங் போகணும் னு தான் நினைப்போம். ஆனால் அது முடியமா போயிடுது.




உடற்பயிற்சி செய்வதற்கு முன்னால் கவனிக்க வேண்டிய சில விஷயங்களை தெரிந்து கொள்வோம்.



  • உடற்பயிற்சி செய்ய தொடங்கும் போது , ஒரு நாளில் ஏதேனும் ஒரு நேரம் காலை அல்ல மாலை வேளைகளில் 30நிமிடங்கள் முதல், 1 மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும் என நடைமுறைக்கு சாத்தியமான ஒன்றை தொடங்க வேண்டும். பின்னர் பழக்கம் ஆன பிறகு, காலை உடற்பயிற்சி செய்ய நேரத்தை மாற்றி கொள்ளலாம்.

  • உடலில் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு, இதய துடிப்பு, என அனைத்தையும் அவ்வப்போது பரிசோதித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

  • உடற்பயிற்சி செய்யும் தொடங்கிய நாள் முதல் ஒரு மாதம் கழித்து உடல் எடை உடல் சுற்றளவு போன்றவற்றை அளந்து தெரிந்து கொள்வது,  உடற்பயிற்ச்சியை தொடர்ந்து செய்வதற்கு ஒரு உத்வேகமாக இருக்கும்.


உடற்பயிற்சி செய்வதனால் வரும் நன்மைகள்



  • உடலில் கலோரிகளை குறைப்பதோடு மட்டுமில்லாமல், உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. உடல் இயக்கங்கள் , தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்துகிறது.

  • உடற்பயிற்சி தினம் செய்வது, மனஅழுத்தத்தை குறைகிறது. ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களை சரியாக இயங்க உதவுகிறது. தூக்கமின்மையை சரி செய்கிறது.

  • உடலின் வளைவுத்தன்மையை அதிக படுத்துவதன் மூலம், மூட்டுகளின் இயக்கத்தை அதிகப்படுத்துகிறது. இது உடலுக்கு பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கிறது.

  • தினம் உடல் பயிற்சி செய்து உடல் எடையை குறைப்பதன் மூலம், தன்னம்பிக்கையை அதிக படுத்துகிறது.

  • இன்றைய சூழலில், வாழ்வியல் முறை மாற்றங்களினால் வரும் சர்க்கரை நோய் , உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், ஹார்மோன் குறைபாடுகள் , மன அழுத்தம் , வராமல்  .தடுக்கிறது. ஏற்கனவே நோயினால் பாதிக்கப்பட்டால் நோய்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகிறது.

  • மாதவிடாய் சுழற்சி முறையாக வைக்க இது உதவுகிறது.


உடலை பிட்டாக வைக்க உதவும். எந்த உடற்பயிற்சி வேண்டுமானாலும்  செய்யலாம். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப உடல் பயிற்சியை தேர்வு செய்து தினம் செய்யலாம்