ஷிலாஜித் (Shilajit) என்பது மிகவும் பிரபலமான ஆயுர்வேத மருந்து. இது இமயமலை பகுதிகளில் உள்ள கனிமங்களில் இருந்து பெறப்படுகிறது. இது அங்குள்ள தாவர பொருட்களில் இருந்து உருவாகிறது என்று சொல்லப்படுகிறது. ஷிலாஜித் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன.  பல்வேறு ஆரோக்கிய குணங்கள் கொண்ட ஷிலாஜித் நன்மைகளை காணலாம். 


என்றென்றும் இளமையாக இருக்கலாம்


ஷிலாஜித் ஆக்ஸிடேடிவ்களால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு உதவுகிறது. அதனால் ஏற்படும் மன அழுத்தம் உள்ளிட்டவற்றை குறைப்பதற்கு ஷிலாஜித் உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது மேலும், இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதால் உடல் ஆரோக்கியம் பெறும். இதனால், வயதான தோற்றம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.


மனச்சோர்வு, மன அழுத்ததை குறைக்க உதவுகிறது


ஷிலாஜித் சாப்பிடுவதால் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தை குறையும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் சொல்கின்றனர். இதில் உள்ள ஃப்ல்பிக் ஆசிட் மனதை ரிலாக்ஸ்-ஆக வைக்க உதவுகிறது. இதில் உள்ள பொட்டாஷியம் மற்றும் மேக்னீசியம் மனகவலை, மனச்சோர்வு ஆகியவற்றில் இருந்து விடுபட உதவுகிறது. ஷிலாஜித் எடுத்துகொண்டால், அல்சைமரில் இருந்து குணமாகலாம் என்றும் கூறப்படுகிறது. மனநல ஆரோக்கியத்திற்கு இது பெரிதும் உதவிப்புரியக் கூடியதாகவும் நம்பப்படுகிறது.


செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்


செரிமான பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருபவர்கள் ஷிலாஜித் எடுத்துகொண்டால் அதிலிருந்து விடுபடலாம். இது செரிமான மண்டலத்தின் செயல்திறன் மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாக்ககும். குறிப்பாக, குளிர் காலத்தில் செரிமான மண்டலத்தின் திறன் சற்று குறைவாக இருக்கும். அப்போது, ஷிலாஜித் சாப்பிடுவது குடல் ஆரோக்கியம் உள்ளிட்ட செரிமான சக்தியை அதிகரிக்கும். 


இதய ஆரோக்கியம்


குலுததையோன் (Glutathione) என்ற ஆன்டி- ஆக்ஸிடண்ட் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. இதில் உள்ள ஹியூமிக் ஆசிட் கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. இதனால், ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. 


இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்


ஷிலாஜித் சாப்பிடுவதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதய பாதிப்பு உள்ளவர்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.


நோய் எதிர்ப்பு சக்தி 


சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஷிலாஜித் சாப்பிட்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மழைக்காலங்கள் மற்றும் குளிர்காலத்தில் இதை எடுத்துகொள்வது நல்லது. 


சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஷிலாஜித் சாப்பிட்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மழைக்காலங்கள் மற்றும் குளிர்காலத்தில் இதை எடுத்துகொள்வது நல்லது. 


இரத்தச்சோகையில் இருந்து விடுபடலாம்


ஷிலாஜித்தில் உள்ள இரும்புச்சத்து மற்றும் ஹியூமிக் ஆசிட் உள்ளிட்டவை இரத்தச்சோகை ஏற்படாமல் தடுக்கிறது. 




இதையும் படிங்க.


பாரம்பரியம் மிக்க தயிர் தேங்காய் சட்னி : செய்வது எப்படி? - இதோ உங்களுக்கான டிப்ஸ்


குளிர்காலத்தில் தயிர்.. சளி பிடிக்குமா? என்ன விளைவுகள்? ஊட்டச்சத்து நிபுணர் கூறும் பதில் என்ன!