தென்னிந்திய உணவுகளுக்கு என்று தனிச்சுவை எப்போதும் உண்டு. சலிக்கவே சலிக்காத தோசை, மிருதுவான இட்லி, பருப்பும் சிறுவெங்காயமும் நறுமணத்தை ஏற்றும் சாம்பார் என அவற்றை நினைக்க நினைக்க நாவில் எச்சில் ஊறும்.  இவற்றுடன் சட்னி சேர்த்து சாப்பிடவில்லை என்றால் சாப்பிட்டது போலவே தோன்றாது. சில சட்னி வகைகள் தற்போது புழக்கத்தில் இல்லை என்றாலும் பாரம்பரியம் மிக்க அவற்றின் சுவைக்கு நிகர் வேறு எதுவும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒன்றுதான் தேங்காய் தயிர் சட்னி. தேங்காயும் தயிரும் எப்படி நன்றாக இருக்கும் என்று யோசிப்பவர்களுக்கு..இந்த சட்னி ஒரு விதமான மேஜிக் எனலாம்!  





இந்த சூப்பர் சுவையான சட்னி பல சுவையான உணவுகளுக்கு சரியான சைட் டிஷ்ஷாகச் செயல்படுகிறது. உதாரணமாக, எலுமிச்சை சாதம், உத்தப்பம், வடை மற்றும் பல. நீங்கள் இதை வட இந்திய பராத்தா, குல்சா மற்றும் பலவற்றுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.ஆனால், தேங்காய் சட்னி ஆரோக்கியத்திற்கு நல்லதா? தேங்காயில் அதிக நார்ச்சத்து உள்ளது, இது செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும். தேங்காய் சட்னி சாப்பிடுவது குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. இது அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிற செரிமான பிரச்சனைகளையும் தடுக்கிறது. இந்த சட்னியை சாப்பிடுவதன் மற்றொரு நன்மை என்னவென்றால், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.இதைத் தயாரிக்க, உங்களுக்குத் தேவைப்படுவது தயிர், காய்ந்த தேங்காய், இஞ்சி, மிளகாய் மற்றும் இன்னும்  சில அடிப்படை சமையலறைப் பொருட்கள். இனி இதற்கான செய்முறையைப் பார்ப்போம். 


தேங்காய் தயிர் சட்னி செய்முறை: தேங்காய் தயிர் சட்னி செய்வது எப்படி, தொடங்குவதற்கு, தயிரை சரியாக அடித்து, அதை ஒதுக்கி வைக்கவும். பிறகு, ஒரு மிக்ஸி கிரைண்டரை எடுத்து, தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக இணைக்கவும். ஒரு மென்மையான மற்றும் சீரான பேஸ்டாக மாறும் வரை அரைக்கவும். அடுத்தபடியாக தயிர் சேர்த்து மீண்டும் கலக்க வேண்டும். ஒரு சிறிய பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, முழு சிவப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்க்கவும். அந்த தாளிப்பு தயார் ஆனதும் அதனைத் தயார் செய்த சட்னியில் ஊற்றவும். சுவையான தயிர் தேங்காய் சட்னி ரெடி!


தேங்காய் கலந்த உணவு என்பதால் விரைவில் புளித்துப் போக வாய்ப்பு உண்டு அதனால் அதனை உபயோகித்த பிறகு ஃபிரிட்ஜில் சேமித்து வைக்கவும்.இது சட்னி விரைவில் கெடாமல் பார்த்துக்கொள்ளும். தென்னிந்திய பாரம்பரிய உணவு என்பதால் வெளிநாடுகளில் இருந்து வரும் விருந்தினர்களுக்கு இது மிகவும் பிடித்த சுவையான உணவாக இருக்கும்.