சென்னையில் நேற்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிமுறைகளை மீறியதாக 252 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


புத்தாண்டு கொண்டாட்டம்


உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைக் கட்டியுள்ளது. புத்தாண்டு பிறந்துவிட்டதை மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடி வரவேற்றுள்ளனர்.  கடற்கரை, பூங்காக்கள் என சுற்றுலா தளங்களில் புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு  முதல் புத்தாண்டை விமர்சையாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன. அதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை காவல்துறை எச்சரித்திருந்தது.


276 வாகனங்கள் பறிமுதல்


இந்த நிலையில், புத்தாண்டை முன்னிட்டு நேற்று இரவு முழுவதும் சென்னை மாநகர போலீசார் வாகன சோதனையை மேற்கொண்டனர். இந்த சோதனையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 252 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களுடைய வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். 24 பேர் மீது அதிவேகமாக வாகனத்தை ஒட்டியதற்காக வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், 22 பேர் மீது ஆபத்தான முறையில் வாகனத்தை ஒட்டியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.






இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணித்ததாக 65 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை வளசரவாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் சாலை ஓரம் உள்ள மின்கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளார். கொண்டாட்டத்தின்போ விதிமுறைகளை மீறயதாக சென்னை மாநகரம் முழுவதும் மொத்தமாக 276 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


விழுப்புரம்


அதேபோன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன சோதனைகள் நடத்தப்பட்டன. அதில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மதுபோதை, ஆவணமின்றி சுற்றித்திரிந்தவர்களின் 150 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.