தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தில் அக்டோபர் 15,1931 ஆம் ஆண்டு பிறந்த அப்துல்கலாம், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தில் இருந்து கடின உழைப்பாலும், கல்வியாலும் பல்வேறு சாதனைகளை புரிந்தார்.

விஞ்ஞானி, குடியரசுத் தலைவர்:

அரசுப் பள்ளியில் தொடக்க கல்வியை தொடங்கி, இயற்பியல் இளங்கலை படிப்பை திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் முடித்தார். சென்னை எம்.ஐ.டி.-யில் விண்வெளி பொறியியல் படிப்பில் சேர்ந்தார். அதே துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்) ஆகியவற்றில் பணியாற்றினார்.

அப்துல் கலாம் பல சோதனைகளை சந்தித்து இருந்தாலும், அவர் கொண்ட விடாமுயற்சி , நாட்டின் மீது வைத்த பற்று, அவரை 2002ம் ஆண்டில் இந்தியாவின் குடியரசுத் தலைவராக்கியதே என்றே சொல்லலாம். அவர் தடைகளை உடைத்தது மட்டுமல்லாமல், தடைகளை படிகற்களாக மாற்றினார் என்றே சொல்லலாம்.

அவர் எந்த இடங்களுக்கு உரையாற்ற சென்றாலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான தத்துவங்களை கூற தவறுவதில்லை. குறிப்பாக, அவர் இளைஞர்களுடன் உரையாடுவதையும், அவர்களை உறசாகப்படுத்துவதையும் மிகவும் விரும்புவார். அவர் கூறிய தத்துவங்களை காணலாம்.

கலாம் தத்துவங்கள்:

  • நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்,எப்போதுமே மண்டியிடுவதில்லை.- அப்துல் கலாம்
  • நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன.
  • நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்,உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும். நீ நீயாக இரு.
  • நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்..!
  • கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை, கனவு மட்டுமே காண்பவர்கள்தான் தோற்கிறார்கள்.
  • வாய்ப்புக்காக காத்திருக்காதே. உனக்கான வாய்ப்பை நீயே உருவாக்கிக்கொள்.
  • கனவு காணுங்கள்...  கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு.

Also Read:Abdul Kalam Gift: பரிசை கூட வாங்காத அப்துல் கலாம்.. கிரைண்டருக்காக பணத்தை தந்த சம்பவம்.. ஐஏஎஸ் அதிகாரி நெகிழ்ச்சி பதிவு

Also Read: Agni-3 Ballistic Missile: ஒன்றரை டன் எடையை சுமந்து 3 ஆயிரம் கிமீ. செல்லும் அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி