இந்தியாவின் பாதுகாப்புக்காக தயாரிக்கப்பட்டு வரும் அக்னி ரக ஏவுகணைகளின் வரிசையில், அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் வகையிலான கூடுதல் அம்சங்களுடன் புதிய தலைமுறை ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு ராணுவத்தில் இணைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் அக்னி - 3 ஏவுகணை சோதனை முன்னதாக ஒடிசாவில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த பாலிஸ்டிக் ஏவுகணையக் கொண்டு அருகாமை நாடுகளின் உட்பகுதி வரை தாக்குதல் நடத்த இயலும்.
1.5 டன் எடையை 3,000 கி.மீ.க்கு மேல் எடையை சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த சக்தி வாய்ந்த ஏவுகணை மிகத் துல்லியமாக அதன் இலக்கைத் தாக்கும் திறனையும் கொண்டது.
அக்னி ரக ஏவுகணைகளில் தற்போது அக்னி-1 (700 கிமீ), அக்னி-2 (2,000 கிமீ), அக்னி-3 (3,000 கிமீ), அக்னி-4 (4,000 கிமீ) மற்றும் 5,000 கிமீ தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட அக்னி. -5 ஆகியவை உள்ளன.
கடந்த மாதம் அக்னி பிரைம் ஏவுகணை சோதனை இதேபோல் ஒடிசா கடற்கரையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அக்னி பிரைம் ஏவுகணையானது அக்னி -3 ரக ஏவுகணையின் எடையை விட 50 விழுக்காடு குறைவானது.
அதேபோல் முன்னதாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) டிசம்பர் 18, 2021 அன்று பாலிஸ்டிக் ஏவுகணை 'அக்னி பி'யை வெற்றிகரமாக சோதித்தது குறிப்பிடத்தக்கது.