தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் (ESIC- Employees State Insurance Corporation) காலியாக உள்ள நர்ஸிங் அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.
பணி விவரம்
Nursing Officer (செவிலியர்)
பனியிடங்களின் மொத்த எண்ணிக்கை - 1930
கல்வித் தகுதி :
இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து B.Sc. (Hons.), B.Sc. Nursing/ Diploma in General Nursing Mid-Wifery ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்
'Pay Matrix as per 7th CPC’ -ன்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
பணி இடம்:
இதற்கு தேர்வு செய்யப்படுபவர்கள் நாடு முழுவதும் உள்ள இ.எஸ்.ஐ. அலுவலகங்களில் நியமிக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பக் கட்டணமாக ரூ.25 ஆன்லைனில் செலுத்த வேண்டும். பழங்குடியின / பட்டியலின பிரிவினர்,பெண்கள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் குறித்த விவரங்கள்:
இதற்கான விண்ணப்பக் கட்டணம் 25 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத் தொகையை BHIM UPI, ஆன்லைன் பேங்கிங் ஆகியவற்றின் மூலமும், Visa, Mastercard, Maestro, RuPay ஆகிய நிறுவனங்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்கள் மூலமாகவும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பணச்சீட்டு மூலமாகவும் செலுத்தலாம். அதேநேரம் பெண் தேர்வர்கள், பட்டியலின/ பழங்குடியினர் பிரிவு, மாற்றுத் திறனாளிகள், ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை
எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.upsconline.nic.in- என்ற இணையதள முகவரி வாயிலாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.03.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://upsc.gov.in/sites/default/files/AdvtNo-52-2024-Spcl-NrsngOfcr-engl-070324.pdf -என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
மேலும் வாசிக்க..அரசுக் கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்கள் தேர்வு: இட ஒதுக்கீட்டை சரியாகப் பின்பற்ற வலியுறுத்தல்