அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் துறை, சயின்ஸ் & ஹுமானிடிஸ், உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணி விவரம்


உதவிப் பேராசிரியர்


எரோஸ்பேஸ் பொறியியல், பயோடெக்னாலனி,. சிவில் பொறியியல், கம்யூட்டர் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், உள்ளிட்ட துறைகள், வேதியியல், ஆங்கிலம், கணிதம், ஆர்கிடெக்ட், மைனிங் பொறியியல், பிரிண்டிங் பேக்கேஜிங் டெக்னாலஜி, மெடிகல் எலக்ட்ரானிக்ஸ், இண்டர்ரெட் ஆஃப் திங்க்ஸ், ஆர்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ் உள்ளிட்ட துறைகளில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


கல்வித் தகுதி 



  • இந்தப் பணியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட இளங்களை அல்லது முதுலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.70% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,

  • முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • நெட்/ ஸ்லெட் (National Eligibility Test (NET),  (State Level Eligibility Test - SLET / SET conducted by the Government of Tamil Nadu),) தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  • M.Phil. / Ph.D முடித்தவர்கள் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. 


விண்ணப்ப கட்டணம்


பொதுப்பிரிவினருக்கு - ரூ.1180/-


பழங்குடியின / பட்டியலின பிரிவினர் ஆகியோருக்கு - ரூ.427/- 


சரக்கு மற்றும் சேவை வரி உடன் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.


ஊதிய விவரம்


 7th Pay Commission - அடிப்படையில் ஊதியம வழங்கப்படும்.



விண்ணப்பிக்கும் முறை:


https://www.aiu.ac.in/- என்ற இணைப்பை க்ளின் செய்து ஆன்லைன் மூலம் விண்ணபிக்க வேண்டும்.


https://rcell.annauniv.edu/aurecruitment_ud_2024/login.php- என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.



ஆஃப்லைன் விண்ணப்பங்களையும் சமர்பிக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


“Application for the post of Assistant Professor in the Department(s) / Centre of ______________ and
code No(s). ______.-  என்று அஞ்சல் உறையின் மீது குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். 


அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி


Registrar,


Anna University,


Chennai – 25 


விண்ணபிக்க கடைசி தேதி - 01.04.2024 17.30 மணி வரை..


அஞ்சல் வழியாக விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி - 05.04.2024 17.30 மணி வரை


விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்ய https://rcell.annauniv.edu/aurecruitment_ud_2024/login.php - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.